»   »  இயற்கைக்கு புறம்பாக உறவு, அடி உதை: கணவர் மீது முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் புகார்

இயற்கைக்கு புறம்பாக உறவு, அடி உதை: கணவர் மீது முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை பாபி டார்லிங் தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் நடிகை பாபி டார்லிங். கடந்த 2015ம் ஆண்டு
நவம்பர் மாதம் பாங்காக்கிற்கு சென்று அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார்.

பாலிவுட் படங்களில் நடித்து வரும் பாபி இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.

தொழில் அதிபர்

தொழில் அதிபர்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சினிபிளக்ஸ் வைத்திருக்கும் ராம்னீக்
சர்மாவை கடந்த ஆண்டு திருமணம் செய்தார் பாபி. அதன் பிறகு தனது பெயரை பாக்கி
சர்மா என்று மாற்றிக் கொண்டார்.

கணவர்

கணவர்

ராம்னீக் தினமும் குடித்துவிட்டு தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக பாபி
டார்லிங் போலீசில் புகார் அளித்துள்ளார். ராம்னீக் அடிக்கும்போது அழுது
தனது உடையில் சிறுநீர் கழித்ததாகவும் பாபி தெரிவித்துள்ளார்.

உறவு

உறவு

ராம்னீக் தன் பணத்தை எல்லாம் பறித்துக் கொண்டதுடன் தன்னுடன் இயற்கைக்கு
புறம்பான முறையில் உறவு வைத்ததாகவும் பாபி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகம்

சந்தேகம்


ராம்னீக்கிற்கு என் நடத்தை மீது சந்தேகம். என்னை பல ஆண்களுடன்
தொடர்புபடுத்தி பேசினார். வீட்டில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்தினார்.
யார் போன் செய்தாலும் லவுட் ஸ்பீக்கரில் போட்டுத் தான் நான் பேச வேண்டும்.
நான் என்ன பேசுகிறேன் என்பதை அவர் கேட்டுக் கொண்டிருப்பார் என்கிறார் பாபி.

கார்

கார்

என் பணத்தை வைத்து ராம்னீக் கார் வாங்கினார். மும்பையில் உள்ள என்
அபார்ட்மென்ட்டில் அவரும் சக உரிமையாளர் என்று எழுதி வாங்கிக் கொண்டார்.
தற்போது என்னிடம் பணமே இல்லை என்று பாபி தெரிவித்துள்ளார்.

தப்பியோட்டம்

தப்பியோட்டம்

ராம்னீக் வீட்டில் இல்லாத நேரத்தில் டாக்சி வரவழைத்து தப்பினேன். என்னை
கண்டுபிடித்துவிடுவார் என்று நினைத்து செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்தேன்.
விமான நிலைய கழிவறையில் 8 மணிநேரம் பதுங்கியிருந்து மும்பைக்கு தப்பி
வந்தேன் என்று பாபி கூறியுள்ளார்.

English summary
Former Bigg Boss contestant Bobby Darling has filed a FIR against her husband Ramneek Sharma accusing him of domestic violence and unnatural sex.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil