»   »  மறுபடியும் முதலில் இருந்தா?: ஸ்ரேயாவுடன் ராணா காதல்?

மறுபடியும் முதலில் இருந்தா?: ஸ்ரேயாவுடன் ராணா காதல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தெலுங்கு நடிகர் ராணா நடிகை ஸ்ரேயாவுடன் மும்பையில் ஜோடியாக வந்ததை பார்த்தவர்கள் அவர்கள் தங்களின் காதலை புதுப்பித்துவிட்டார்களோ என்று பேசினர்.

தெலுங்கு நடிகர் ராணாவும் நடிகை த்ரிஷாவும் காதலிப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டது. இதை ராணாவும், த்ரிஷாவும் மறுத்தனர். ராணாவும் நடிகை ஸ்ரேயாவும் ஒரு காலத்தில் காதலித்து பிரிந்தனர்.

இந்நிலையில் அவர்கள் ஜோடியாக மும்பையில் சுற்றியுள்ளனர்.

ராணா

ராணா

ராணாவும், ஸ்ரேயாவும் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஜோடியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

காதலோ?

காதலோ?

ராணாவையும், ஸ்ரேயாவையும் ஜோடியாக பார்த்தவர்கள் அவர்கள் தங்களின் காதலை புதுப்பித்துவிட்டதாக நினைத்தார்கள். இது குறித்து ஸ்ரேயாவிடம் கேட்டதற்கு குபீரென சிரித்துவிட்டார்.

நண்பர்கள்

நண்பர்கள்

எனக்கும், ராணாவுக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை. நாங்கள் நல்ல நண்பர்கள். இருவருக்கும் பொதுவான நண்பரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம் அவ்வளவு தான் என்கிறார் ஸ்ரேயா.

பிராவோ

பிராவோ

முன்னதாக ஸ்ரேயா மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ட்வெய்ன் பிராவோவுடன் மும்பையில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட வந்தார். அப்போதும் அவருக்கும், பிராவோவுக்கும் இடையே காதல் என்ற பேச்சு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former lovers Rana and Shriya were spotted together in Mumbai which kindled the rumours of them being together again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil