»   »  அஜீத்துக்கு மாரடைப்பு என வதந்தி பரப்பியவரை கண்டுபிடித்துவிட்டோம்: மேனேஜர்

அஜீத்துக்கு மாரடைப்பு என வதந்தி பரப்பியவரை கண்டுபிடித்துவிட்டோம்: மேனேஜர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலியான ட்வீட் போட்ட நபரை கண்டுபிடித்துவிட்டதாக அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

அஜீத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த தகவல் உண்மை இல்லை என்று அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். அவரது ட்விட்டர் கணக்கு போன்றே போலியான ஒன்றை உருவாக்கி தான் அஜீத்தின் உடல்நலம் குறித்த செய்தியை யாரோ வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து சுரேஷ் சந்திரா கூறுகையில்,

இப்படியுமா?

இப்படியுமா?

நடிகர்கள் பற்றி போலியான செய்திகளை பரப்ப மக்கள் இந்த அளவுக்கு செல்வார்கள் என்று நான் ஒருபோதும் நினைத்துக் கூட பார்த்தது இல்லை.

ட்விட்டர்

ட்விட்டர்

என் ட்விட்டர் கணக்கு போன்றே போலியான கணக்கு உருவாக்கப்பட்டு அதில் அஜீத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ட்வீட் செய்யப்பட்டதை பார்த்து நான் அப்படியே அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.

பொய்

பொய்

அந்த போலி ட்விட்டர் கணக்கில் போடப்பட்டிருந்த ட்வீட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். உடனே எனது ட்விட்டர் கணக்கில் அஜீத்தின் உடல்நலம் பற்றி வெளியான தகவலில் உண்மை இல்லை என்பதை விளக்கினேன்.

கண்டுபிடித்துவிட்டோம்

கண்டுபிடித்துவிட்டோம்

அஜீத் பற்றி பொய்யான தகவலை வெளியிட்ட விஷமியை கண்டுபிடித்துவிட்டோம். ஆதாரம் கிடைத்த உடன் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார் சுரேஷ் சந்திரா.

English summary
Ajith's manager Suresh Chandra told that they have found out the person who spread rumours about Thala's health via twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil