»   »  வட இந்தியாவில் 1000 அரங்குகளில் ரஜினியின் கபாலி.. ஃபாக்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது!

வட இந்தியாவில் 1000 அரங்குகளில் ரஜினியின் கபாலி.. ஃபாக்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் புதிய படம் கபாலியை வட இந்தியாவில் 1000 அரங்குகளில் வெளியிடுகிறது ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா நிறுவனம்.

உலக அளவில் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக மாறியுள்ளது கபாலி படம்.

கபாலி படத்தின் வடஇந்தியத் திரையரங்கு உரிமையைப் புகழ்பெற்ற ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது.

Fox Star to release Kabali in North India

இந்திப் பதிப்பை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிடுவதால் படம் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கபாலியின் ஹிந்திப் படத் தொலைக்காட்சி உரிமம், ஸ்டார் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது.

ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா நிறுவனம், வட இந்தியாவில் 1000 திரையரங்குகளில் திரையிட உள்ளது. ஜூலை 22-ம் தேதி படம் வெளிவரும் என்று நம்பகத் தகுந்த தகவல்கள் தெரிவித்துள்ளதால் அன்றைய தினம் மட்டும் வட இந்தியாவில் படம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The Hindi version of Rajinikanth's Kabali movie will be distributed by Fox Star in all over Norther parts of India

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil