»   »  மூன்று மாதங்களில் நான்கு தமிழ்ப் படங்கள்...! - பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்

மூன்று மாதங்களில் நான்கு தமிழ்ப் படங்கள்...! - பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹாலிவுட்டில் வெற்றிக் கொடி கட்டிய ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம், ஹிந்தியிலும் அந்த வெற்றியைத் தொடர்ந்தது. அப்படியே மாநில மொழிப் படங்களிலும் கால்பதித்த ஃபாக்ஸ் ஸ்டார், 'ராஜா ராணி', 'காக்கா முட்டை', 'எங்கேயும் எப்போதும்', 'குக்கூ' மற்றும் 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களை தமிழில் தயாரித்து நல்ல பெயர் பெற்றது.

இந்த 2017 ஆம் ஆண்டில் நான்கு படங்களை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இதற்காக ஏ ஆர் முருகதாஸ், வெற்றி மாறன், அட்லீ போன்ற பிரபல இயக்குநர்கள் - தயாரிப்பாளர்கள் ஆகியரோடு மீண்டும் கை கோர்த்துள்ளது. நடிகர் விஷ்ணுவுடன் இணைந்து ஒரு படம் தயாரிக்கிறது.

Fox Star's 4 movies in next 3 months

அடுத்த மூன்று மாதங்களில் இந்த நான்கு படங்களும் தொடர்ந்து வெளியாகவிருக்கின்றன.

அட்லீ இணை தயாரிப்பு செய்து, திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தை மே 19 ஆம் தேதியும், ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில், அதிரடி கதைக் களத்தில் உருவாகி இருக்கும் 'ரங்கூன்' படத்தை ஜூன் 9 ஆம் தேதியன்றும், தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் தயாரிப்பில், அரசியல் பிண்ணனியில் உருவாகி இருக்கும் 'அண்ணனுக்கு ஜெய்' படத்தை ஜூலை 7 ஆம் தேதி அன்றும் வெளியிடுகிறது பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்.

Fox Star's 4 movies in next 3 months

இவற்றைத் தொடர்ந்து விஷ்ணு நடித்து, ஜூன் 23 ஆம் தேதி வெளியாகும் நகைச்சுவை படமான 'கதாநாயகன்' படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் விநியோகம் செய்கிறது.

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸின் படங்கள் பெரும்பாலானவை, அறிமுக இயக்குநர்களால் இயக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Fox Star Studios is releasing 4 important movies in Tamil in next three months.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil