ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது அம்மா மீது புதிதாக பாய்ந்த வழக்கு.. பல கோடிகளை மோசடி செய்ததாக புகார்

மும்பை: கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்த வழக்கில் கைதாகி உள்ள நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது அம்மா சுனந்தா ஷெட்டி மீது புதிதாக மோசடி வழக்கு ஒன்று பாய்ந்துள்ளது.

ஆபாச பட விவகாரத்தால் ஏற்கனவே வெளியே தலை காட்ட முடியாத நிலையில் உள்ள நடிகை ஷில்பா ஷெட்டி மீதும் தற்போது அதிரடியாக வழக்கு பாய்ந்திருப்பது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

வெல்னஸ் சென்டர் ஆரம்பிப்பதாகக் கூறி பல கோடி ரூபாய் பணத்தை இருவரும் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

ஷில்பா ஷெட்டி மீது வழக்கு

ஷில்பா ஷெட்டி மீது வழக்கு

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது அம்மா சுனந்தா ஷெட்டி மீதும் புதிதாக லக்னோ காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கணவர் ராஜ் குந்த்ரா ஏற்கனவே கைதாகி இருக்கும் சூழலில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அடுத்த பிரச்சனையாக இது அமைந்துள்ளது.

வெல்னஸ் சென்டர்

வெல்னஸ் சென்டர்

நடிகை ஷில்பா ஷெட்டி யோகா செய்து அசத்துவது உலகத்திற்கே தெரியும். Losis Wellness Centre எனும் வெல்னஸ் சென்டரை ஆரம்பித்து ஏகப்பட்ட பேருக்கு பயிற்சி அளித்து சம்பாதித்து வருகிறார் நடிகை ஷில்பா ஷெட்டி. இந்நிலையில், வெல்னஸ் சென்டர் தொடர்பாக ஷில்பாவும் அவரது அம்மாவும் மோசடி செய்துள்ளதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோடிகளில் மோசடி

கோடிகளில் மோசடி

லாசிஸ் வெல்னஸ் சென்டரின் சேர்மேனாக ஷில்பா ஷெட்டி செயல்பட்டு வருகிறார். அவரது அம்மா சுனந்தா இயக்குநர் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில், புதிதாக வெல்னஸ் சென்டரை உருவாக்கி தருவதாக் கூறி பல கோடி ரூபாய்களை இருவரும் மோசடி செய்துள்ளதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எஃப்.ஐ.ஆர்

எஃப்.ஐ.ஆர்

இதுதொடர்பாக லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கனி மற்றும் விபூதி கான்ஸ் காவல் நிலையங்களில் இரு எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீது தொடரப்பட்ட இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கைதாவாரா ஷில்பா

கைதாவாரா ஷில்பா

ஹை புரொஃபைல் பிரபலம் என்பதால் போதிய ஆதாரங்கள் கிடைத்த பின்னரே இந்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி மீது என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்கலாம் என போலீசார் முடிவு செய்ய முடியும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிக்கிய கணவர்

சிக்கிய கணவர்

ஏற்கனவே ஆபாச பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை ஏகப்பட்ட ஆதாரங்களை திரட்டிய பின்னரே மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்தது. இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி மீதும் மோசடி புகார் எழுந்திருப்பது பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலையை கிளப்பி இருக்கிறது.

ஆபாச பட நடிகை பகீர்

ஆபாச பட நடிகை பகீர்

முன்னதாக ராஜ் குந்த்ரா தான் தனது குரு என்றும், ஆபாச படங்களில் நடிக்க அவர் தான் தன்னை நிர்பந்தித்தார் என்றும், நடிகை ஷில்பா ஷெட்டியும் தனது படங்களை விரும்பி பார்த்ததாகவும் ஏகப்பட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்களை பேட்டி வழியாக தெரிவித்து பரபரப்பை கிளப்பி வருகிறார்.

அடி மேல் அடி

அடி மேல் அடி

கணவர் ராஜ் குந்த்ராவை ஆபாச பட விவகாரத்தில் இருந்து வெளியே கொண்டு வர ஏகப்பட்ட போராட்டங்களை சந்தித்து வரும் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அடுத்த அடியாக அவர் மீதே இப்படியொரு குற்ற வழக்கு பாய்ந்துள்ளது அடி மேல் அடி விழுந்த கதையாக உள்ளது.

சிக்கலில் அம்மா

சிக்கலில் அம்மா

ஷில்பா ஷெட்டி மட்டுமின்றி அவரது அம்மா சுனந்தா ஷெட்டியும் இந்த பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியுள்ளதால் கடும் மன உளைச்சலில் நடிகை ஷில்பா ஷெட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த பிரச்சனையில் இருந்து வயதான தனது அம்மாவை காப்பாற்றவும் ஷில்பா போராடி வருகிறார்.

வேண்டுமென்றே டார்கெட்

வேண்டுமென்றே டார்கெட்

தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தை வேண்டுமென்றே டார்கெட் செய்து நடவடிக்கைகள் பாய்ந்து வருவதாக ஷில்பா ஷெட்டியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மறுபக்கம் குடும்பமே மோசடி குடும்பமா என்றும் ஷில்பா ஷெட்டியை உடனடியாக கைது செய்யுங்க என்றும் ட்ரோல் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X