எல்லாம் ஓகே ஆகிடுச்சு.. ஸ்லம்டாக் மில்லியனர் நாயகியின் வருங்கால கணவர் இவர்தான்!
மும்பை: ஆஸ்கர் விருதுகளை குவித்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நாயகியாக அறிமுகமான ஃப்ரீடா பின்ட்டோவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
தனது வருங்கால கணவர் கோரி டிரானின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு தனது திருமணம் இவருடன் தான் என்பதனை அறிவித்துள்ளார்.
தேவ் பட்டேலுடன் பிரேக் அப் செய்த ஃப்ரீடா பின்ட்டோ, விரைவில் கோரி டிரானுடன் திருமணம் செய்துகொள்வார் என தெரிகிறது.

ஹாலிவுட்
இந்திய நடிகையான ஃப்ரீடா பின்டோவுக்கு 2008ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ஸ்லம்டாக் மில்லியனரில் கிடைத்த வாய்ப்பு அவரை தொடர்ந்து பல ஹாலிவுட் படங்களில் நடிக்க வைத்தது. இம்மார்டல்ஸ், ரைஸ் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ், மோக்லி, பிளாக் கோல்ட் உள்ளிட்ட படங்கள் ஹாலிவுட்டில் அவருக்கு பிளாக்பஸ்டர் வெற்றியையும் கொடுத்தன.
அந்த சீன்
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் அப்பாவியான மும்பை பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்த ஃப்ரீடா, இம்மார்டல்ஸ் படத்தில் முழு நிர்வாண காட்சியில் தோன்றி ரசிகர்களை கலங்கடித்தார். ஆனால், அது டூப் போட்டு எடுக்கப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரேக் அப்
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த தேவ் படேலுடன் பல விருது விழாக்களுக்கு சென்று வந்த ஃப்ரீடா பின்ட்டோ அவர் மீது காதலில் விழுந்தார். இருவரும் சுமார் ஆறு ஆண்டுகளாக டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் தங்களது பிரேக் அப்பை அறிவித்தனர்.
விரைவில் டும் டும் டும்
தேவ் படேலுடன் ஏற்பட்ட பிரிவுக்கு பிறகு சில காலம் தனிமையில் இருந்த ஃப்ரீடா பின்ட்டோ, தற்போது பொதுவெளிக்கு தனது காதலர் கோரி டிரானை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், வருங்கால கணவர் என்று கேப்ஷன் போட்டு அவர் உருகியுள்ளதை பார்த்த ரசிகர்கள் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதை அறிந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











