»   »  இன்றைய ரிலீஸ் 5... எதிர்ப்பார்ப்பை உண்டாக்கிய 'மீண்டும் ஒரு காதல் கதை'!

இன்றைய ரிலீஸ் 5... எதிர்ப்பார்ப்பை உண்டாக்கிய 'மீண்டும் ஒரு காதல் கதை'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று வழக்கமான ஒரு வெள்ளிக்கிழமைதான். ஆனாலும் 5 புதிய படங்கள் வெளியாகின்றன.

அவற்றில் இரு படங்களுக்கு ஓரளவு எதிர்ப்பார்ப்பு உள்ளது. அவை மீண்டும் ஒரு காதல் கதை மற்றும் கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.


மீண்டும் ஒரு காதல் கதை

மீண்டும் ஒரு காதல் கதை

மலையாளத்தில் வெளியான தட்டத்தின் மறையத்து படத்தின் தமிழ் ரீமேக் இந்தப் படம். மெல்லிய நகைச்சுவை, அழுத்தமான காதல் கலந்த படம். அறிமுக நாயகன் வால்டர் - இஷா தல்வார் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ். மித்ரன் ஜவகர் இயக்கியுள்ள இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, மிகப் பிடித்துப் போனதால் தனது கலைப்புலி இன்டர்நேஷனல் பேனரில் வெளியிடுகிறார் கலைப்புலி தாணு.


எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது

கவுண்டமணி, சௌந்தர்ராஜா, 'கபாலி' ரித்விகா நடித்துள்ள படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. கவுண்டரின் பஞ்ச் வசனங்கள், சௌந்தர் - ரித்விகாவின் இளமை துள்ளும் நடிப்பு என ரசிகர்களை ஈர்க்கும் விஷயங்கள் நிறையவே இருப்பதால் படத்துக்கு கணிசமான அரங்குகள் கிடைத்துள்ளன. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ளார்.


சாக்கோபார்

சாக்கோபார்

ராம்கோபால் வர்மா மிகக் குறைந்த செலவில் இயக்கியுள்ள படம் இந்த சாக்கோபார். மதுராஜ் தயாரித்துள்ள இந்தப் படம் ஒரு க்ளாமர் - த்ரில்லர் வகை. ஆறு பேர் நடிக்க, ஆறே நாட்களில் படத்தை முடித்துள்ளாரா்கள்.


54321

54321

இது ஒரு சைக்கோ த்ரில்லர் படம். 'ரம்மி', 'தாண்டவக்கோனே' படங்களில் நடித்த ஜி.ஆர். அர்வின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகி கன்னட வரவு பவித்ரா.


ராகவேந்திர பிரசாத் இயக்கியுள்ளார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார்வென்று வருவான்

வென்று வருவான்

புதுமுகம் வீரபாரதி, சமீரா, எலிசபெத் நடித்துள்ள வென்று வருவான் படத்தை எழுதி இயக்கி தன் ரியாலிட்டி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் விஜேந்திரன். தாய்ப்பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது இந்தப் படம்.

'ரீமேக் எனக்குப் பிடிக்காது; ஆனாலும்...' - மீண்டும் ஒரு காதல் கதை மித்ரன் ஜவஹர்!- வீடியோ#IshaTalwar' Exclusive Interview on #MeendumOruKadhalKadhai


English summary
Today there are 5 new straight Tamil releases including Meendum Oru Kadhal Kathai hitting the screens worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil