»   »  இன்றைய ரிலீஸ்... நல்ல ஓபனிங்குடன் வெளியாகும் திருநாள்!

இன்றைய ரிலீஸ்... நல்ல ஓபனிங்குடன் வெளியாகும் திருநாள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நயன்தாரா - ஜீவா நடிப்பில், ராம்நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திருநாள் படம் இன்று உலகெங்கும் வெளியாகிறது.

கபாலி ஜூரம் மெல்ல தணிய ஆரம்பித்துள்ள இந்த மூன்றாவது வாரத்தில் புதிய படங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

இன்று மட்டும் மொத்தம் நான்கு புதுப் படங்கள் வெளியாகின்றன. அவற்றில் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக இருப்பது ராம்நாத் இயக்கியுள்ள திருநாள்.

திருநாள்

திருநாள்

அம்பாசமுத்திரம் அம்பானி வெற்றிப் படத்துக்குப் பிறகு இயக்குநர் ராம்நாத் இயக்க ஆரம்பித்த படம் திருநாள். இந்தப் படத்தின் கதை பிடித்துப் போனதால் தனது இப்போதைய அந்தஸ்தையெல்லாம் பார்க்காமல் ஒப்புக் கொண்டாராம் நயன்தாரா. அய்யா படத்தில் வருவதுபோன்ற குடும்பப் பாங்கான வேடத்தில் பள்ளி ஆசிரியையாக அவர் நடித்திருக்கிறார்.

கும்பகோணம் பகுதியில் கலக்கும் ஒரு ரவுடியாக ஜீவா நடித்துள்ளார். படம் குறித்து சினிமா ரசிகர்கள் மத்தியில் நிலவும் நேர்மறையான கருத்துகள் படத்தை வெற்றிக்கு இட்டுச் செல்லும் என நம்புகிறார்கள்.

நமது

நமது

கவுதமி - மோகன் லால் நடித்துள்ள இருமொழிப் படம் 'நமது'. தெலுங்கில் மன்மதா என்ற பெயரில் வெளியாகும் இந்தப் படத்தை சந்திரசேகர் ஏலட்டி இயக்கியுள்ளார்.

தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்

தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்

ரொம்ப நாள் முன்பாகவே தயாராகி, ரிலீசாகாமல் தடுமாறிக் கொண்டிருந்த படம் இது. ஜெய், யாமி கவுதம், சந்தானம் நடித்துள்ளனர். தெலுங்கில் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. இன்று தமிழில் வெளியாகிறது.

என்னமா கதவுடறானுங்க

என்னமா கதவுடறானுங்க

பிரான்சிஸ் ராஜ் இயக்கியுள்ள என்னமா கதவுடறானுங்க படம். காமெடி கலந்த பேய் படம் இது. மும்பையை சேர்ந்த அர்வி இப்படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்துள்ளார். நாயகிகளாக அலிஷா சோப்ரா, ஷாலு நடித்துள்ளனர்.

English summary
Today there are 4 straight Tamil films including Thirunaal are releasing worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil