»   »  வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... முத்தின கத்தரிக்கா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு!

வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... முத்தின கத்தரிக்கா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வெள்ளிக்கிழமை ஸ்பெஷலாக நான்கு நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

இவற்றில் முத்தின கத்தரிக்கா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய இரண்டும் ஓரளவு எதிர்பார்ப்புக்குள்ளான படங்களாகத் தெரிகின்றன.


முத்தின கத்தரிக்கா

முத்தின கத்தரிக்கா

இந்தப் படத்தில் சுந்தர் சி நாயகனாக நடித்துள்ளார். அவரது மனைவி குஷ்புதான் தயாரிப்பாளர். ஆனால் படத்தை இயக்கியிருப்பவர் சுந்தர் அல்ல.. அவரது உதவியாளர் வெங்கட் ராகவன். சுந்தர் சி படமென்றாலே நான் ஸ்டாப் காமெடிக்கு உத்தரவாதம் என்ற நிலை இருப்பதால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உள்ளது.


எனக்கு இன்னொரு பேர் இருக்கு

எனக்கு இன்னொரு பேர் இருக்கு

லைகா நிறுவனத்தின் நேரடித் தயாரிப்பில் வரும் இரண்டாவது படம் இது. சாம் ஆன்டன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார். தமாஷ் படமா, ஆக்ஷன் படமா என்ற எந்த முன் குறிப்பும் இல்லாமல் வரும் இந்தப் படத்தில் ஜெயித்தால்தான் ஜிவி பிரகாஷின் சினிமா கேரியர் ஒரு தெளிவுக்கு வரும்.
காதல் அகதீ

காதல் அகதீ

மதுரை சம்பவம் படத்தின் ஹீரோ ஹரிக்குமார் நடித்துள்ள படம் காதல் அகதீ. சாமி திருமலை இயக்கியுள்ளார். ஒசூர் ராமையா தயாரித்துள்ளார்.


அங்காளி பங்காளி

அங்காளி பங்காளி

ரொம்ப நாளைக்கு முன் ஆரம்பித்த படம் இப்போதுதான் திரைக்கு வருகிறது. பரோட்டா சூரி, சானியாதாரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை பால முருகன் இயக்கியுள்ளார்.English summary
There are 4 Tamil movies including Muthina Kathrikka are releasing today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil