»   »  கபாலி ஜுரத்திலும் தைரியமாகக் களமிறங்கிய 2 புதிய படங்கள்.. கூடவே ஆட்டுக்கார அலமேலு!

கபாலி ஜுரத்திலும் தைரியமாகக் களமிறங்கிய 2 புதிய படங்கள்.. கூடவே ஆட்டுக்கார அலமேலு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஊரே கபாலி ஜுரத்தில், ரிபீட்டு எனக் கூறியபடி வெவ்வேறு அரங்குகளில் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் தைரியமாக இரு படங்கள் இன்று திரையைத் தொட்டுள்ளன.

அவற்றில் ஒன்று வெள்ளிக்கிழமை 13-ம் தேதி. இன்னொன்று ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் ஹாலிவுட் படம் பிஎஃப்ஜி.

வெள்ளிக்கிழமை 13-ம் தேதி

வெள்ளிக்கிழமை 13-ம் தேதி

தில்லுக்கு துட்டுக்குப் பிறகு வந்திருக்கிற இன்னொரு பேய்ப் படம் இந்த வெள்ளிக்கிழமை 13-ம் தேதி. பேய்கள் தினம் என்று சொல்லிக் கொண்டு வந்திருக்கிறது இந்தப் படம். விக்ரம் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை புகழ்மணி இயக்கியுள்ளார். ஸ்ராவ்யா, ரத்தன் குமார், சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பிஎஃப்ஜி

இந்த உலகம் உன் கற்பனையை விடப் பெரிது என்ற அறிவிப்புடன் வந்துள்ள படம் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் தி பிஎஃப்ஜி. இந்தப் படத்தின் தமிழ் பதிப்புக்கு நாசர் குரல் கொடுத்துள்ளார்.தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.

லைட்ஸ் அவுட்

லைட்ஸ் அவுட்

தி கஞ்சூரிங் படத்தைத் தந்த ஜேம்ஸ் வான் தயாரிப்பில் உருவாகியுள்ள இன்னொரு ஹாலிவுட் படம் லைட்ஸ் அவுட்டும் இன்றுதான் வெளியாகிறது.

ஆட்டுக்கார அலமேலு

ஆட்டுக்கார அலமேலு

கோடம்பாக்கத்தை ஒரு பக்கம் கபாலி ஜுரமும், மறுபக்கம் கொஞ்சமே கொஞ்சம் இந்த மாதிரி புதுப் படங்களுலும் ஆக்கிரமித்துள்ள நிலையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆட்டுக்கார அலமேலு படத்தை தூசு தட்டி இன்று ரிலீஸ் செய்துள்ளனர். இதான் தில்லு!!

English summary
There two new movies Vellikkizhamai 13-m Thethi and The BFG releasing today amidst high Kabali fever.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil