»   »  இன்றைய ஸ்பெஷல்.... இறைவி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்!

இன்றைய ஸ்பெஷல்.... இறைவி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று வெள்ளிக்கிழமை ஸ்பெஷலாக இரு புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

இறைவி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகியவைதான் அந்த புதிய படங்கள்.


இரண்டு படங்களுமே இருவேறு தளங்களில் ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டவை.


இறைவி

இறைவி

பீட்சா, ஜிகிர்தண்டா ஆகிய இரண்டே படங்களில் தன்னை முதல் நிலை இயக்குநராக உயர்த்திக் கொண்டவர் கார்த்திக் சுப்பராஜ். இரண்டே படங்களில் ரஜினிகாந்தையே ஈர்த்தது மட்டுமல்ல, அவரை இயக்க கதை சொன்ன பெருமைக்கும் சொந்தக்காரரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம் என்பதால் இறைவி ஸ்பெஷல்.


பெண்களை கவுரவிக்க...

பெண்களை கவுரவிக்க...

'சில woMenகளின் கதை' என்ற முத்திரை வாசகத்துடன் வெளியாகும் இந்தப் படம் பெண்களின் பெருமையை உணர வைக்கும் படமாக இருக்கும் என்கிறார் கார்த்திக் சுப்பராஜ். எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி, அஞ்சலி, கமலினி முகர்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன், அபி அன்ட் அபி மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.


சந்தோஷ் நாராயணன் இசை படத்தின் இன்னொரு ஸ்பெஷல்.வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்

தலைப்பே சொல்லிவிடும் இது எந்த மாதிரிப் படம் என்று. தீபாவளி படத்துக்குப் பிறது காதல் காமெடி ரூட்டைப் பிடித்துவிட்ட எஸ் எழில் இயக்கியுள்ள படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் ஹீரோ விஷ்ணு விஷாலும் தயாரித்துள்ள படம் இது. சத்யா இசையமைத்துள்ளார்.


காமெடிப் பட்டாளம்

காமெடிப் பட்டாளம்

இந்தப் படத்தில் சூரி, ரோபோ சங்கர், ரவி மரியா, சூப்பர் குட் லட்சுமணன் என காமெடிப் பட்டாளமே களமிறங்கி கிச்சுகிச்சு மூட்டியுள்ளதாம். கோடம்பாக்கத்தின் இன்றைய ஹாட் நிக்கி கல்ராணி படத்தின் ஸ்பெஷல்!


இரண்டுதான்

இரண்டுதான்

வழக்கமாக நான்கைந்து படங்கள் வெளியாகி, அடுத்த மூன்று நாட்களில் காணாமல் போகும். ஆனால் இந்த வாரம் இரு வேறு ரகமான படங்கள் வெளியாவது ரசிகர்களை தியேட்டர் பக்கம் வரவழைக்கும் என நம்புகிறது கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ்!


English summary
Today Friday there are 2 direct Tamil movies in different genre Iraivi and Velainnu Vanthutta Vellaikkaran are releasing worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil