»   »  சூப்பர் டூப்பர் நண்பர்கள் தினம்.. டிவிட்டரில் வாழ்த்துகளைக் குவித்த ஸ்டார்கள்

சூப்பர் டூப்பர் நண்பர்கள் தினம்.. டிவிட்டரில் வாழ்த்துகளைக் குவித்த ஸ்டார்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று உலக நண்பர்கள் தினம், இந்த உலகில் காதலை விடவும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது நட்பிற்கு மட்டும் தான். காதல் மட்டுமன்று பெற்றோர், சுற்றம், உறவினர்கள் இவர்கள் எல்லோரையும் விட ஒருபடி அதிக உரிமையும் உறவும் நட்பிற்கு உண்டு.

திரைப்படங்களில் காதலுக்கு இணையான அளவு நட்பிற்கும் இடமுண்டு எத்தனையோ பாடல்கள் காட்சிகள் நட்பின் ஆழத்தை வெளிப்படுதுபவையாக உள்ளன. அன்று தொடங்கி இன்று வரை சாதி, மாதம், இனம் , மொழி இவற்றையெல்லாம் எப்போதும் கடந்து வெற்றிக் கொடி நாட்டி வரும் வேகமும் ஆழமும் நட்பிற்கு மட்டுமே உண்டு.

இன்று உலகநண்பர்கள் தினம் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் கொண்டாடுவதற்கு வசதியாக ஞாயிற்றுக் கிழமையன்று வந்துள்ளது, இந்த நல்ல நாளில் நண்பர்கள் தினத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த நட்சத்திரங்களின் ட்வீட்டுகள் சிலவற்றை இங்கு காணலாம்.

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் - ஆர்யா

ஆர்யாவின் படங்களை வாழ வைப்பதே நட்புதான் என்று சொல்லுமளவிற்கு அவரின் படங்களில் நட்பிற்கு ஒரு தனி இடமுண்டு. "எனது நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள், இன்று உங்கள் நண்பர்களுடன் சென்று ட்ரீட் வைத்துக் கொண்டாடுங்கள். நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்யுங்கள், எப்பொழுதும் வேடிக்கை காட்டி மகிழ்ச்சியுடன் இருங்கள்" என்று அனைவருக்கும் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நட்புகள் வாழ்வை உயர்த்துகின்றன - விவேக்

உயர்ந்த நட்புகள் வாழ்வின் நட்பையும் தரத்தையும் உயர்த்துகின்றன என்று மக்களின் ஜனாதிபதி திரு அப்துல்கலாமுடன் தான் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு நண்பர்கள் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் விவேக்.

சூப்பர் டூப்பர் நண்பர்கள் தினம் - குஷ்பூ

நண்பர்கள் தின வாழ்த்துக்கள், நட்பை யார் யாரிடமிருந்தோ மனம் விரும்புகின்றது. நண்பர்கள் போன்று வாழ்க்கையை யார் கொடுக்க முடியும், எனது நண்பர்கள் எனது உலகத்தை வடிவமைத்து ஒரு அழகான வாழ்க்கையை எனக்கு அளித்திருக்கின்றனர்" என்று நட்பைப் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை குஷ்பூ.

நட்பை மதிப்பிட முடியாது - ஹன்சிகா

"ஒரு அணைப்பு 1000 வார்த்தைகளுக்கு இணையானது ஆனால் ஒரு நட்பை எதனுடனும் ஒப்பிட முடியாது இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்" என்று ஹன்சிகா நண்பர்கள் தினத்திற்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குமியுமடா - வெங்கட் பிரபு

இயக்குநர் வெங்கட் பிரபு "அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குமியுமடா, நம் வெற்றிகள் குமியுமடா" என்று சென்னை 28 படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளைக் குறிப்பிட்டு நண்பர்கள் தினத்திற்கு வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார்.

இந்த நல்ல நாளில் தட்ஸ்தமிழ் சார்பாக நாமும் நமது நண்பர்கள் தின வாழ்த்துகளைப் பதிவு செய்யலாம்...அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

English summary
Friendship Day Celebrities Twitter Wishes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil