»   »  "தோஸ்த் படா தோஸ்த் தோஸ்துக்கு இல்லை வாஸ்து..."

"தோஸ்த் படா தோஸ்த் தோஸ்துக்கு இல்லை வாஸ்து..."

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று உலக நண்பர்கள் தினம் எல்லோரும் அவரவர் நண்பர்களுடன் நண்பர்கள் தினத்தைக் கொண்டாடிக் கொண்டு இருக்கும், இந்த நல்ல நேரத்தில் தமிழ் சினிமாவில் நட்புக்காக வெளிவந்த சில சிறந்த பாடல்களை இங்கு காணலாம்.

காதலைப் போலவே நட்பிற்கும் சிறந்த இடம் தமிழ் சினிமாவில் எப்போதும் உண்டு. அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்று சிவாஜியில் தொடங்கி, நன்பேண்டா என்று நேற்று வந்த சந்தானம் வரை அனைவரது மனதிலும் நட்பிற்கு என்று ஒரு தனியிடம் எப்போதும் உண்டு.

தமிழ் சினிமாவில் நட்பின் முக்கியத்துவத்தை ஏராளமான பாடல்கள் விளக்கி இருந்தாலும் கூட நாம் நமது பங்கிற்கு சில மனதைத் தொட்ட பாடல்களை இங்கு காணலாம்..

நட்பிற்காக

தலைப்பே நட்பிற்காக என்று இருப்பதால் இந்தப் பாடலை முதலில் பார்க்கலாம். படத்தில் விஜயகுமார் சரத்குமார் இருவரும் உயிர்த்தோழர்களாக இருப்பார்கள் ஒரு சந்தர்ப்பத்தில் சரத்குமார் கோபித்துக் கொள்ள அவரை சமாதானப்படுத்த விஜயகுமார் இந்த பாடலைப் பாடுவார். நட்பின் பெருமையை அழகாக எடுத்துக் கூறும் பாடல் இது.

சென்னை 28

இயக்குநர் வெங்கட் பிரபுவின் சென்னை 28 படம் இன்றளவும் நண்பர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு படமாக இருக்கிறது. அந்தப் படம் முழுவதுமே நட்பைப் பற்றி தான் என்றாலும் வாழ்க்கையை யோசிங்கடா தலைஎழுத்தை நல்லா வாசிங்கடா என்ற இந்தப் பாடல் அழகாக நட்பைப் பற்றி கூறியதால் இந்தப் பாடலையும் இந்தப் பட்டியலில் இணைத்து உள்ளேன்.

நினைத்தாலே இனிக்கும்

பிருத்விராஜ், சக்தி, பிரியாமணி இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் இடம்பெற்ற நண்பனைப் பார்த்த தேதி மட்டும் ஒட்டிக் கொண்டது என் ஞாபகத்தில்" என்ற இந்தப் பாடல் நண்பனை முதன்முதலில் பார்த்ததை அழகாக எடுத்துக் கூறும் ஒரு சிறந்த பாடல்.

கல்லூரி

இயக்குநர் பாலாஜி சக்திவேல் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுத்த இந்தப் படம், நட்பின் எதார்த்தத்தை எந்தவித சாயமும் இல்லாமல் அழகாகப் பதிவு செய்திருக்கும். படத்தில் இடம்பெற்ற " ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ அதன் பெயர் நட்பு" கல்லூரி நட்பின் அழகை எடுத்துக் கூறும் இந்தப் பாடல் நண்பர்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு அழகான பாடலாக இன்றுவரை இருக்கிறது.

சிநேகிதியே

ஜோதிகா, தபு இணைந்து நடித்த இந்தப் படம் ஒரு திகில் சம்பவத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். படத்தில் ஜோதிகா தன் தோழியின் பிறந்த நாளுக்கு பாடும் " தேவதையின் வம்சம் நீயோ" கல்லூரியில் தோழிகளுக்கு மத்தியில் உள்ள நட்பை அருமையாகப் பதிவு செய்திருக்கும் இந்தப் பாடலுக்கு பெண்கள் மத்தியில் இன்றுவரை ஒரு சிறந்த இடமுள்ளது.

ஏப்ரல் மாதத்தில்

ஸ்ரீகாந்த் சினேகா இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்து நடித்த ஏப்ரல் மாதத்தில் திரைப்படத்தில் கல்லூரியின் கடைசி நாளில் நண்பர்கள் அனைவரும் இணைந்து பாடும் " மனசே மனசே மனசில் பாராம் நண்பர் கூட்டம் பிரியும் நேரம்" இந்தப் பாடல் இன்றளவும் கல்லூரி பேர்வெல் டே நாளில் பாடும் ஒரு பாடலாக விளங்குகின்றது.

நண்பன்

விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா இணைந்து நடித்த நண்பன் திரைப்படம் முழுவதுமே நட்பின் பெருமையை எடுத்துக் கூறும் விதமாக படமாக்கப் பட்டிருக்கும். படத்தின் ஆரம்பத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா இருவரும் விஜயை தேடிப் போகும் போது விஜயை நினைத்து" என் பிரண்டப் போல யாரு மச்சான் " என்ற இந்தப் பாடலைப் பாடுவார்கள்.

சரோஜா

சரோஜா திரைப்படத்தில் இடம்பெற்ற " தோஸ்த் படா தோஸ்த் தோஸ்துக்கு இல்லை வாஸ்து" என்ற பாடலையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆட்டோகிராப்

ஒரு இளைஞனுக்கும் இளம் பெண்ணிற்கும் இடையிலான நட்பை எடுத்துக் கூறும் வகையில் ஆட்டோகிராப் திரைப்படத்தில் சேரனுக்கும் சினேகாவிற்கும் இடையே வரும் " கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்புத் தோழி" பாடல் இடம்பெற்றிருக்கும்.

சக்கரக்கட்டி

நடிகர் பாக்யராஜின் பையன் சாந்தனு நாயகனாக அறிமுகமான சக்கரக்கட்டி திரைப்படத்தில் நண்பனை டாக்ஸியுடன் ஒப்பிட்டு பாடிய" டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு அழகிய டாக்ஸி" இந்தப் பாடல் இன்றைய நட்பை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கும்.

Read more about: songs, பாடல்கள்
English summary
Today World Friendship Day - Top 10 Friendship Songs in Tamil.
Please Wait while comments are loading...