நயன்தாராவுக்கு வாழ்த்து கூட சொல்லாத பிரபலங்கள்.. அழைப்பிதழ் கொடுக்கலையா.. அவாய்டு பண்ணிட்டாங்களா?

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஜெயம் ரவி, கார்த்தி, சூர்யா என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

ஆனால், தென்னிந்திய சினிமாவின் பல முக்கிய நடிகர்கள் நயன்தாரா திருமணத்திலும் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு சமூக வலைதளங்களில் சின்னதாக ஒரு வாழ்த்துக் கூட போடவில்லையே ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

முதலமைச்சர் வரவில்லை

முதலமைச்சர் வரவில்லை

மற்ற பிரபலங்களுக்கு எல்லாம் நேரில் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்தார்களா நயன்தாரா - விக்னேஷ் சிவன் என்பதே புரியாத புதிராக உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழ் வழங்கியும் அவர் திருமணத்துக்கு வரவில்லையே, மணமக்களுக்கு வாழ்த்து ட்வீட் கூட போடவில்லையே என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் மகள் திருமண வரவேற்பில் முதலமைச்சர் கலந்து கொண்டாரே என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உதயநிதி சென்றாரா?

உதயநிதி சென்றாரா?

நடிகை நயன்தாராவுடன் இது கதிர்வேலன் காதல், நண்பேன் டா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த உதயநிதி ஸ்டாலின் கூட திருமணத்திற்கு சென்றதாக தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், ஒரு வாழ்த்து கூட அவர் போடவில்லையே என நயன்தாராவின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கமலை அழைத்தாரா

கமலை அழைத்தாரா

நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்து நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் கட்டியதாக கூறப்படும் நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அழைப்பிதழ் ஆவது கொடுத்தார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. நயன்தாரா திருமணத்தன்று விக்ரம் சக்சஸ்மீட் விழாவை கமல் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் வரவில்லை

அஜித் வரவில்லை

நடிகர் அஜித் நயன்தாராவுடன் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் அடுத்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவும் உள்ளார். ஆனால், நயன்தாராவின் திருமணத்துக்கு வழக்கம் போல சினிமா விழா என நினைத்துக் கொண்டு வருவதை தவிர்த்து விட்டு மனைவி மற்றும் குழந்தைகளை அனுப்பி உள்ளார். சுரேஷ் சந்திரா வீட்டுத் திருமணத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் குமார் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

விஜய் வந்தாரா

விஜய் வந்தாரா

நடிகர் விஜய் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டதாக வீடியோ ஒன்று வைரலானது. ஆனால், அது பழைய வீடியோ என்றும் விஜய் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. அதே போல ட்விட்டர் பக்கத்திலும் நடிகர் விஜய் எந்தவொரு திருமண வாழ்த்தையும் நடிகை நயன்தாராவுக்கு கூறவில்லை. சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் விஜய் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வேறலெவலில் டிரெண்டாகின.

தனுஷும் வாழ்த்தல

தனுஷும் வாழ்த்தல

நயன்தாராவுடன் யாரடி நீ மோகினி படத்தில் நடித்த நடிகர் தனுஷ் அந்த படத்தின் இயக்குநர் ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட்களை பதிவிட்டு வருகிறாரே தவிர நயன்தாரா மற்றும் தன்னுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் இணைந்து நடித்த விக்னேஷ் சிவனையும் வாழ்த்தி ஒரு ட்வீட் கூட போடவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாழ்த்தலாமே சிம்பு

வாழ்த்தலாமே சிம்பு

அதே போல நடிகர் சிம்பு அப்பா டி ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு சென்று விட்டார். ஆனால், ஜூன் 10ம் தேதி மிந்த்ரா விளம்பர ட்வீட்டை போடுகிறார். ஆனால், தனது முன்னாள் காதலி நயன்தாராவுக்கு ஏன் வாழ்த்து போடவில்லை. இருவரும் நண்பர்களாகி பின்னர் இது நம்மாளு படத்தில் நடித்திருந்தார்களே என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

சிவகார்த்திகேயனும்

சிவகார்த்திகேயனும்

நடிகர் விஜய்சேதுபதி தனது குடும்பத்துடன் நயன்தாரா திருமணத்துக்கு வந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தன்னுடன் வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த நயன்தாராவின் திருமணத்துக்கு வாழ்த்துக் கூட சொல்லவில்லையாம்.

நடிகைகள் யாரும் வரல

நடிகைகள் யாரும் வரல

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமா முழுவதும் ஏகப்பட்ட நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை நயன்தாரா. ஆனால், அவரது திருமணத்துக்கு ஒருவரும் வரமுடியாத அளவுக்கு படங்களில் பிசியாக உள்ளனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு வரவும் இல்லை வாழ்த்தவும் இல்லை என ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளனர். மேலும், பல பிரபலங்கள் வரவும் இல்லை அட்லீஸ்ட் வாழ்த்தவும் இல்லையே ஏன் என்றும் ரசிகர்கள் கேட்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X