Don't Miss!
- News
மக்களை தேடி மருத்துவம் மாடலில்.. தேசிய அளவில் வருகிறது பிஎம் ஸ்பெஷல் திட்டம்! 1 லட்சம் பேருக்கு வேலை
- Lifestyle
மகரம் செல்லும் வக்ர சனியால் ஜூலை 12 முதல் இந்த 5 ராசிக்காரங்க அதிக பிரச்சனையை சந்திக்கப் போறாங்க..
- Automobiles
இது ஒன்னை மட்டும் செஞ்சீங்கன்னா உங்க கார் மேல எல்லாரும் கண்ணு வெச்சுருவாங்க... இந்த ட்ரிக்ஸ் சூப்பரா இருக்கே!
- Sports
"அவர ஏன் டீமில் சேர்க்கவில்லை.. ".. டிராவிட்டை வெளுத்து வாங்கிய பாக், சீனியர்.. இதுவும் சரி தானே!
- Finance
டெல்லி-யில் 30 நாள் ஷாப்பிங் திருவிழா.. அரவிந்த் கெஜ்ரிவால் பிரம்மாண்ட அறிவிப்பு..!
- Travel
இந்தியாவில் ஜூலை மாதத்தில் மிஸ் பண்ணக்கூடாத சுற்றுலாத் தலங்களின் லிஸ்ட் இதோ!
- Technology
மோசடி செய்கிறதா Vivo நிறுவனம்? விவோ தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Cannes 2022: சிகப்பு கம்பள வரவேற்பு.. கெத்தாக கலந்து கொண்ட கமல், பா ரஞ்சித், மாதவன், தமன்னா!
கான்ஸ்: 75வது சர்வதேச கான்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கான்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
சிகப்பு கம்பள வரவேற்பில் தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் இந்திய சினிமா பிரபலங்கள் அனைவரும் இந்தியாவின் சார்பில் பங்கேற்றனர்.
கமல்ஹாசன், மாதவன், பா. ரஞ்சித், ஏ.ஆர். ரஹ்மான், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, பூஜா ஹெக்டே, நவாசுதின் சித்திக் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
ஐஸ்வர்யா
ராய்,
தீபிகா
படுகோன்,
பூஜா
ஹெக்டே..
களைகட்டும்
கான்ஸ்
திரைப்பட
விழா..
ரசிகர்கள்
மகிழ்ச்சி!

கான்ஸில் கமல்
சர்வதேச அளவில் புகழ்மிக்க கான்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். சிகப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் கமல் கெத்தாக நடந்து வந்த காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன. மேலும், தனது விக்ரம் படத்தின் டிரைலரை கான்ஸ் திரைப்பட விழாவில் கமல் திரையிட உள்ளார் என்கிற தகவலும் பரவி வருகிறது.

மாதவன், நவாசுதின் சித்திக்
75வது கான்ஸ் திரைப்பட விழாவில் தனது ராக்கெட்டரி திரைப்படத்தை வெளியிட காத்திருக்கிறார் நடிகர் மாதவன். இந்நிலையில், கான்ஸ் திரைப்பட விழாவின் சிகப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் அவர் ரெட்கார்ப்பெட்டில் நின்றபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் டிரெண்டாகி வருகிறது. பாலிவுட்டின் திறமையான நடிகர் நவாசுதின் சித்திக்கும் உடன் இருக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான்
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் ரெட்கார்ப்பெட் நிகழ்ச்சியில் ராஜநடை போட்டுள்ளார். மேலும், இந்திய சினிமா பிரபலங்களுடன் அவர் அணிவகுந்து நின்ற புகைப்படமும் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. நடிகர் மாதவன், அமைச்சர் அனுராக் தாக்கூர், நவாசுதின் சித்திக் உள்ளிட்ட பலருடன் ஏ.ஆர். ரஹ்மான் நிற்கும் புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

ரெட்கார்ப்பெட்டில் ரஞ்சித்
இயக்குநர் பா. ரஞ்சித்தும் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார் என ஏற்கனவே தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியான நிலையில், ரெட்கார்ப்பெட்டில் கோட்சூட் மாட்டிக் கொண்டு செம கெத்தாக பா. ரஞ்சித் இருக்கும் புகைப்படமும் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

தீபிகா படுகோன்
கான்ஸ் திரைப்பட விழாவுக்கு ஜூரியாக சென்றுள்ள நடிகை தீபிகா படுகோன் வித விதமான உடைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார். கான்ஸ் திரைப்பட விழாவின் நடுவர்கள் குழுவுடன் அவர் இருக்கும் போது க்ளிக் செய்யப்பட்ட புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

நயன்தாரா இல்லைன்னா தமன்னா
கான்ஸ் திரைப்பட விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால், அவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் கிளம்பி உள்ளன. நடிகை தமன்னாவிற்குத் தான் அழைப்பு விடுக்கப்பட்டு அவர் கான்ஸ் திரைப்பட விழாவில் கவர்ச்சி உடையில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.