For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இந்த ஆண்டின் சிறந்த நடிகர் யார்? சூப்பர்ஸ்டார் முதல் சூர்யா வரை.. டாப் 10 ஹீரோக்கள் பட்டியல்!

  |

  சென்னை: இந்த ஆண்டின் சிறந்த நடிகர்கள் யார் என்கிற டாப் 10 பட்டியலை பார்க்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

  2020ம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட ஏகப்பட்ட படங்கள் வெளியாகாத நிலையில், குறைந்த எண்ணிக்கையில் வெளியான படங்களில் தரமான நடிப்பை வெளிக்காட்டிய ஹீரோக்களை இங்கே வரிசைப் படுத்தியுள்ளோம்.

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, துல்கர் சல்மான், அசோக் செல்வன், சூர்யா என ஏகப்பட்ட நடிகர்கள் இந்த பட்டியலில் எந்த எந்த இடங்களை பெற்றுள்ளனர் என்பதை காணலாம்.

  10. அருண் விஜய்

  10. அருண் விஜய்

  இந்த டாப் 10 பட்டியலில் நடிகர் அருண் விஜய்க்கு 10வது இடம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான மாஃபியா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அருண் விஜய் மற்றும் பிரசன்னாவின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

  9. தனுஷ்

  9. தனுஷ்

  அப்பா, மகன் என டபுல் ரோலில் இந்த ஆண்டு தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியானது. கடந்த ஆண்டு அசுரன் படத்தில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷுக்கு, திரவிய பெருமாள் கதாபாத்திரம் தீனி போட்ட அளவுக்குக் கூட மகன் கதாபாத்திரம் நடிப்புத் தீனி போடவில்லை. அடுத்த ஆண்டு ஜகமே தந்திரம் எப்படி வெடிக்கப் போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

  8. விஜய்சேதுபதி

  8. விஜய்சேதுபதி

  இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் ஒடிடி தளத்தில் வெளியான க/பெ. ரணசிங்கம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் கதையின் நாயகி. ஆனாலும், அந்த படத்திற்கு உயிரோடு இல்லை என்றாலும், கதை முழுக்க நிறைந்தும், கதையை நகர்த்திச் செல்ல உதவியதும் அவரது ரணசிங்கம் கதாபாத்திரம் தான். லாபம், மாஸ்டர், மாமனிதன், யாவரும் கேளிர் என அடுத்த வருடம் அரை டஜன் படங்களோடு காத்திருக்கிறார் விஜய்சேதுபதி.

  7. உதயநிதி ஸ்டாலின்

  7. உதயநிதி ஸ்டாலின்

  இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான சைக்கோ திரைப்படத்தில் இதுவரை காணாத வித்தியாசமான உதயநிதி ஸ்டாலினை ரசிகர்கள் கண்டு ரசித்தனர். பார்வையற்ற நபராக நடித்து, தனது காதலியை காப்பாற்ற போராடும் இடங்களில் உதயநிதி நடித்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், தனது பணியை சிறப்பாகவே செய்து அசத்தினார்.

  6. ஜீவா

  6. ஜீவா

  தணிக்கை குழுவுடன் ஏற்பட்ட பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியான படம் ஜிப்ஸி. இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் குதிரை ஓட்டியாகவும், புரட்சிப் பாடகனாகவும் தேசாந்திரியாக நடித்து அசத்தி இருந்தார் ஜீவா. சீறு, ஜிப்ஸி என இந்த ஆண்டு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனாலும், மிகப்பெரிய வெற்றியை அவர் அடையவில்லை என்றாலும், ஜிப்ஸி படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை மிரட்டி விட்டார்.

  5. அசோக் செல்வன்

  5. அசோக் செல்வன்

  இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் இந்த ஆண்டு ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்களையும் அள்ளியது. ஹீரோவாக அந்த ஒரு சீனில் தன்னை நிரூபித்துக் காட்டும் நடிப்பை வெளிப்படுத்திய இடத்தில் நாயகன் அசோக் செல்வன் செம ஸ்கோர் செய்தார். எம்.எஸ். பாஸ்கரின் டாய்லெட் பொருட்கள் விற்கும் கம்பெனியில் வேலை பார்க்கும் காட்சிகளில் எல்லாம் வேற லெவல் ஆக்டிங்.

  4. ஹரிஷ் கல்யாண்

  4. ஹரிஷ் கல்யாண்

  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹரிஷ் கல்யாண் வெர்ஷன் 2.0வாக அப்டேட் ஆகி உள்ளார். பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு, ஹரிஷ் கல்யாணுக்கு இந்த ஆண்டு இன்னொரு பிளாக்பஸ்டர் ஹிட் கிடைத்தது. இந்தியில் வெளியான விக்கி டோனர் படத்தின் ரீமேக்காக உருவான தாராள பிரபு படத்தில் செம தில்லாக நடித்து ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாகி உள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளன்று ஸ்டார் என்ற அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக்கையும் விட்டு மிரட்டி வருகிறார்.

  3. துல்கர் சல்மான்

  3. துல்கர் சல்மான்

  இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் நடித்தது போலவே தெரியாமல், அவ்வளவு யதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி ஒட்டுமொத்த பெண்கள் இதயத்தையும் கொள்ளையடித்த நடிகர் துல்கர் சல்மான் இந்த பட்டியலில் டாப் 3 இடத்தை தட்டிச் சென்றுள்ளார்.

  2. ரஜினிகாந்த்

  2. ரஜினிகாந்த்

  70 வயதிலும் இன்னைக்கும் நான் ராஜா தான் டா என நடித்து பட்டையை கிளப்பி வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். பொங்கல் ஸ்பெஷலாக வந்த தர்பார் படத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் ஆதித்ய அருணாச்சலமாக நடித்து அசத்தி உள்ளார். ஸ்டைல், கெத்து, வொர்க்கவுட் செய்யும் காட்சி, சும்மா கிழி டான்ஸ் என தெறிக்கவிட்டிருப்பார். எதிர்பார்த்த அளவுக்கு திரைக்கதை சரியாக அமைந்திருந்தால், வேற லெவல் ஹிட் அடித்திருக்கும் இந்த தர்பார்.

  சூர்யா

  சூர்யா

  சுதா கொங்கரா இயக்கத்தில் நெடுமாறன் ராஜாங்கமாகவே வாழ்ந்த சூர்யா தான் இந்த ஆண்டின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். கடும் போட்டியே இருந்தாலும், மாறா மார்தட்டி முதலிடத்தை பிடித்திருப்பார் என்பது தான் சூர்யா ரசிகர்களின் நம்பிக்கை. தந்தையின் மரணத்திற்காக சொந்த ஊருக்கு செல்ல விமான நிலையத்தில் அவர் கெஞ்சும் காட்சி சூரத்தனம்!

  English summary
  Here we listed out top 10 best actors of 2020 in Tamil cinema. This rating included both theatrical release and OTT release movies stars.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X