twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட்ராசக்க.. இன்னொரு வெள்ளி.. டாப்சி முதல் குஷ்பு வரை ரவிக்குமார் தஹியாவை கொண்டாடும் பிரபலங்கள்!

    |

    சென்னை: ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், தற்போது குத்துச் சண்டை வீரர் ரவிக்குமார் தஹியா வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.

    ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் பெருமை சேர்த்து வருவதை ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

    நடிகை டாப்சி முதல் குஷ்பு வரை ஏகப்பட்ட பிரபலங்கள் ரவிக்குமார் தஹியாவை எப்படி வாழ்த்தி இருக்காங்கன்னு இங்கே பார்ப்போம்.

    ப்ளீஸ்.. என் குழந்தைகளின் நலன் கருதி எதையும் சொல்லாதீர்கள்.. உருகிய நடிகை.. மாதவன் பதிலை பாருங்க! ப்ளீஸ்.. என் குழந்தைகளின் நலன் கருதி எதையும் சொல்லாதீர்கள்.. உருகிய நடிகை.. மாதவன் பதிலை பாருங்க!

    வெள்ளிப் பதக்கம்

    வெள்ளிப் பதக்கம்

    மீரா பாய் சானு வெள்ளி வென்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்தார். இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில், மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியா வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    57 கிலோ

    57 கிலோ

    57 கிலோ எடை பிரிவில் இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட ரவிக்குமார் தஹியா ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் சாவூர் உகுவேவிடம் தோல்வியை தழுவியதால் வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார். தங்க பதக்கம் மிஸ் ஆகி விட்டதே என்கிற வருத்தம் தான் அவர் முகத்தில் தெரிகிறது.

    குவிகிறது பாராட்டு

    குவிகிறது பாராட்டு

    இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளதை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வருகிறது. இந்திய பிரதமர் மோடி முதல் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் ரவிக்குமார் தஹியாவை பாராட்டி வருகின்றனர்.

    டாப்சி பாராட்டு

    டாப்சி பாராட்டு

    பாலிவுட்டில் மிரட்டி வரும் நடிகை டாப்சி சபாஷ் மித்து என்னும் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோபிக்கில் நடித்து வருகிறார். ரவிக்குமார் தஹியா மல்யுத்த போட்டியில் வெள்ளி வென்றதை தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டு பாராட்டி உள்ளார்.

    நூறு கோடி இதயங்கள் துடிக்கின்றன

    நூறு கோடி இதயங்கள் துடிக்கின்றன

    இந்தியர்கள் அனைவரையும் பெருமைப் படுத்தி இருக்கீங்க ரவிக்குமார் தஹியா.. தங்கம் போயிடுச்சேன்னு கவலைப்படாதீங்க.. உங்களுக்காக நூறு கோடி இதயங்கள் துடித்துக் கொண்டு இருக்கின்றன என நடிகர் நிவின் பாலி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி உள்ளார்.

    ஸ்ரீஜேஷுக்கும் பாராட்டு

    ஸ்ரீஜேஷுக்கும் பாராட்டு

    கேரளாவை சேர்ந்த ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் கடைசி 15 நொடிகள் தூணாக இருந்து எதிர் அணியினரின் கோல்களை தடுத்து இந்தியாவின் பதக்கத்தை உறுதி செய்ததற்காக அவரையும் பாராட்டித் தள்ளி உள்ளார் நடிகர் நிவின் பாலி. மோகன் லால் உள்ளிட்ட கேரள நடிகர்கள் ஸ்ரீஜேஷை கொண்டாடி வருகின்றனர்.

    கையில் கடித்து

    கையில் கடித்து

    கஜகஸ்தானை சேர்ந்த வீரர் ரவிக்குமார் தஹியாவை கையில் 15 நொடிகள் கடித்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. ஆனாலும், அந்த வலியை தாங்கிக் கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார் ரவிக்குமார் தஹியா என ஏகப்பட்ட பிரபலங்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

    தங்கத்தை விட பெருசு

    தங்கத்தை விட பெருசு

    டோலிவுட் நடிகர் சாய் தரம் தேஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்கத்தை விட நீங்க செய்த சாதனையும் நீங்க அடைந்த வலியும் ரொம்ப பெருசு.. வெற்றிப் பெற்ற விளையாட்டு வீரரை மொத்த நாடும் கொண்டாடி வருகிறது என பாராட்டி தள்ளி உள்ளார்.

    ஜுவாலா கட்டா ட்வீட்

    ஜுவாலா கட்டா ட்வீட்

    நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியும் விளையாட்டு வீராங்கனையுமான ஜுவாலா கட்டா இறுதிப் போட்டிக்கு தேர்வான நிலையில், தங்கம் வென்று வாருங்கள் ரவிக்குமார் தஹியா என போட்ட ட்வீட்டும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. ஏகப்பட்ட நடிகர்கள் மற்றும் நடிகைகளும் ரவிக்குமாரை தங்கம் வெல்ல ஊக்கப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    குதிக்கும் குஷ்பு

    குதிக்கும் குஷ்பு

    ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தொடர்ந்து பதக்கங்கள் குவிந்து வருகின்றன. நான் சந்தோஷத்தில் குதிக்கிறேன். மன உறுதியும் தொடர் போராட்டமுமே வெற்றியைக் கொடுக்கும் சபாஷ் ரவிக்குமார் தஹியா என நடிகை குஷ்பு செம சந்தோஷத்துடன் ட்வீட் போட்டு மனதார பாராட்டி உள்ளார். மேலும், பல நடிகர்கள் மற்றும் நடிகைகளும் இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியாவை கொண்டாடி ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    From actress Taapsee to Khushbu cinema celebrities all over India send wishes to Ravikumar Dahiya for winning silver medal at Olympics.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X