ஆரம்பம் முதல் ரிலீஸ் வரை... வலிமை பட சுவாரஸ்ய தகவல்கள்

சென்னை : கிட்டதட்ட மூன்று ஆண்டுகளாக பலவிதமான தடைகள், தாமதங்கள் ஆகியவற்றை தாண்டி அஜித்தின் வலிமை படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி தியேட்டர் உரிமையாளர்களே திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் கிட்டதட்ட 1000 தியேட்டர்களில் வலிமை ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் போர்டுடனேயே வலிமை படம் திரையிடப்பட்டுள்ளது. தியேட்டருக்கு வெளியில் மட்டுமல்ல உள்ளேயும் ஆட்டம், விசில் என அஜித் ரசிகர்கள் அதகளப்படுத்தி விட்டனர். தீவிர அஜித் ரசிகர்கள் சிலர் படம் பார்த்து விட்டு வந்து சந்தோஷத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடும் வலிமை படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வலிமை வாய்ப்பை மிஸ் செய்த நடிகைகள்

வலிமை வாய்ப்பை மிஸ் செய்த நடிகைகள்

நேர்கொண்ட பார்வை படத்தை முடித்த பிறகு வேறு ஒரு ஹீரோவை மனதில் வைத்து, டைரக்டர் ஹெச்.வினோத் இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளார். ஆனால் தல 60 படத்தையும் தானே தயாரிக்க உள்ளதாக போனி கபூர் அறிவித்ததும், அஜித்திற்கு ஏற்றாற் போல் கதையை மாற்றி உள்ளார். ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் படமான வலிமை படத்தில் ஹீரோயின் ரோலில் நடிக்க ஜான்வி கபூர், பரினிதி சோப்ரா, இலியானா போன்றோரிடம் தான் முதலில் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கால்ஷீட் ஒத்து வராததால் இதில் நடிக்க மறுத்ததால், காலா படத்தில் நடித்த ஹுமா குரேஷியிடம் பேசி, ஓகே வாங்கி உள்ளனர்.

இவங்க கூட மிஸ் பண்ணிட்டாங்களே

இவங்க கூட மிஸ் பண்ணிட்டாங்களே

அதே போல் வில்லன் ரோலில் நடிப்பதற்கும் படக்குழுவின் ஃபஸ்ட் சாய்ஸ், அஜய் தேவ்கனாக தான் இருந்ததாம். ஆனால் அவர் ஆர்ஆர்ஆர் படத்தில் கமிட் ஆனதால் இதை மறுத்து விட்டாராம். அடுத்தபடியாக அரவிந்த்சாமியிடம் கேட்ட போது அவர் தலைவி படத்தில் பிஸியாக இருப்பதாக கூறி உள்ளார். மூன்றாவதாக கேட்ட பிரச்சன்னாவும் இதில் நடிக்க மறுத்து விட்டதால் தெலுங்கு ஹீரோவான கார்த்திகேயாவிடம் பேசி சம்மதிக்க வைத்துள்ளனர்.

கதையை பலமுறை மாற்றிய வினோத்

கதையை பலமுறை மாற்றிய வினோத்

2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் வலிமை ஷுட்டிங் துவங்கப்பட்டது. திட்டமிட்டதற்கு முன்பே அஜித் இந்த படத்தின் வேலைகளை முடித்து கொடுத்துள்ளார். கொரோனாவிற்கு முன்பே படத்தின் 60 சதவீதம் ஷுட்டிங் முடிக்கப்பட்டு விட்டது. பல பைக் ரேஸ் காட்சிகள் சென்னையில் தான் எடுக்கப்பட்டது. கொரோனா பரவல் துவக்கத்தில் இருந்த சமயத்தில் பல இடங்களில் வலிமை பட ஷுட்டிங்கிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாடு, டில்லி என அனுமதி மறுக்கப்பட்டதால் எங்கு ஷுட்டிங் நடத்த முடியுமோ அதற்கு ஏற்றது போல் வினோத் பல முறை கதையை மாற்றி உள்ளார்.

இடம் மாறிய க்ளைமாக்ஸ்

இடம் மாறிய க்ளைமாக்ஸ்

க்ளைமாக்ஸ் காட்சிகளை சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், தென்னாப்பிரிக்காவில் எடுக்க பிளான் செய்தனர். ஆனால் இது எதுவும் முடியாமல் போனதால் ரஷ்யாவில் எடுத்து முடித்தனர். ஒரு வழியாக லாக்டவுன் முடிந்து மீண்டும் ஷுட் துவங்கிய போது ஐதராபாத்தில் ஸ்டன்ட் காட்சிகள் எடுக்கப்பட்ட போது அஜித்துக்கு பேலன்ஸ் தவறியதால் பலத்த காயம் ஏற்பட்டது. இருந்தாலும் கூட 90 நாட்கள் பிளான் செய்த அந்த ஷுட்டிங்கை வெறும் 30 நாட்களில் அஜித் முடித்து கொடுத்துள்ளார்.

வெளியான மற்ற ஹீரோக்கள் படங்கள்

வெளியான மற்ற ஹீரோக்கள் படங்கள்

வலிமை படத்தை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று படக்குழு போராடிக் கொண்டிருக்கும் போது, லாக்டவுன் முடிந்து மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன், சிவகார்த்திகேயனின் டாக்டர் என அடுத்தடுத்த படங்களின் ரிலீஸ் தேதிகள் வெளியிடப்பட்டு, படங்களும் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் வெளியாகி வசூலை குவித்தன. இதனால் கவலையடைந்த அஜித் ரசிகர்கள் வலிமை படக்குழு என்ன தான் செய்கிறார்கள் என கடுப்பாகி, விடாமல் அப்டேட் கேட்க துவங்கி விட்டனர்.

அப்டேட் கேட்டு அலற விட்ட ரசிகர்கள்

அப்டேட் கேட்டு அலற விட்ட ரசிகர்கள்

பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர், உள்ளூர் அரசியல் தலைவர்கள், சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானங்கள், கோயில் திருவிழா என பார்க்கிறவர்களிடம் எல்லாம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்க துவங்கினர். விடாமல் ரசிகர்கள் கேட்ட அப்டேட்டே இந்த படத்திற்கு தனி ப்ரோமோஷன் ஆனது. அப்படி என்ன படம் அது ரசிகர்கள் இப்படி விடாமல் அப்டேட் கேட்கிறார்களே என அனைவரும் நினைக்க துவங்கி விட்டனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற வானதி சீனிவாசனிடம் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்க, அவரோ நான் வெற்றி பெற்றால் நிச்சயம் அப்டேட் வரும் என்றார்.

மொத்தமாக போனி கபூர் தந்த அப்டேட்

மொத்தமாக போனி கபூர் தந்த அப்டேட்

படத்தை முடித்த பிறகும் கூட போனி கபூர் அப்டேட் வெளியிடவேயில்லை. கொரோனா காரணமாக ஃபஸ்ட்லுக், ஃபஸ்ட் சிங்கிள், பட ரிலீஸ் என ஒத்திவைத்துக் கொண்டே போயினர். இருந்தாலும் ரசிகர்கள் விடாமல் அப்டேட் கேட்டு வந்தனர். ஆனால் ரசிகர்கள் அப்போது கேட்டதற்கு எல்லாம் மொதத்தமாக சேர்த்து வைத்து ரிலீசிற்கு முன் தினம் ஒரு ப்ரோமோ வீடியோ வெளியிட்டு அசத்தி விட்டார் போனி கபூர். வலிமை மட்டுமின்றி அடுத்து நடிக்க போகும் ஏகே 61 படத்தின் அப்டேட்டையும் சேர்த்து வெளியிட்டு விட்டார் போனி கபூர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X