»   »  'ஏம்பா.. எத்தனை வாட்டிதான் சொல்றது...?' - சத்யராஜ் மகள் விளக்கம்

'ஏம்பா.. எத்தனை வாட்டிதான் சொல்றது...?' - சத்யராஜ் மகள் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சத்யராஜ் மகள் திவ்யா அடுத்த ஹீரோயினா ?

சென்னை: மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... நான் சினிமாவில் நடிக்கவில்லை என்று மறுப்புத் தெரிவித்துள்ளார் சத்யராஜ் மகள் திவ்யா.

சத்யராஜ் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார். அந்தத் துறையில் பிஎச்டி படிப்புக்கான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்.

From the Desk of Divya Sathyaraj

அவர் சினிமாவில் நடிப்பதாக அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனை அவரும் அவ்வப்போது மறுத்து வந்தார்.

இந்த நிலையில் வடிவேல் என்பவர் தயாரிக்கும் படத்தில் திவ்யா நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனை திவ்யா மீண்டும் மறுத்துள்ளார். இந்த முறை ரொம்பவே அழுத்தம் கொடுத்து மறுப்புத் தெரிவித்துள்ளார். தனது மறுப்பு அறிக்கையில், "மீண்டும் மீண்டும் நான் சினிமாவில் நடிப்பதாக வரும் செய்திகளை மறுக்க வேண்டியுள்ளது. வடிவேல் இயக்கும் புதிய படத்தில் நான் நாயகியாக நடிப்பதாக வந்துள்ள செய்தி தவறானது. அந்தப் படத்தில் என் தந்தை சத்யராஜ்தான் நடிக்கிறார்.

என் கிளினிக்கிலிருந்து வீடு திரும்பவே இரவு 9 மணிக்கு மேலாகிறது. இதில் நான் எங்கே சினிமாவில் நடிப்பது. சினிமா துறை மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. ஆனால் இந்தப் படத்தில் நான் நடிக்கவோ தயாரிக்கவோ இல்லை," என்று தெரிவித்துள்ளார்.

English summary
Divya Sathyaraj says, "I was completely taken aback to read a news that i am going to act in a film to be directed by Mr.Vadivel,there is absolutely no truth in the rumour."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X