»   »  ஓட்டுக்கு பணம் கொடுப்பவன் வருங்கால திருடன் - ஏ.ஆர்.முருகதாஸ்

ஓட்டுக்கு பணம் கொடுப்பவன் வருங்கால திருடன் - ஏ.ஆர்.முருகதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓட்டுப்போட பணம் கொடுப்பவன் வருங்கால திருடன் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் நெருங்கி வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. மற்றொருபுறம் பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது.

Future thief give money for vote says A.R.Murugadoss

மேலும் 100% வாக்குப்பதிவிற்காக விழிப்புணர்வு விளம்பரங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஓட்டுக்கு பணம் வாங்குவதற்கு தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் ''May 16 ஓட்டு போடுவதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும்போது அடையாளம் கொள்க, அவன் வருங்கால திருடன் என்று" என கூறியிருக்கிறார்.

English summary
Director A.R.Murugadoss says 'Future Thief give Money for Vote'.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil