ஜி.பி.முத்துக்கு நீதி கிடைத்தது..தனலட்சுமி வெளியேற்றப்பட்டார்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோஷ்டி சேர்ந்து ஜி.பி.முத்துவை நேற்று முன்தினம் வெளியேற்றினார்கள்.

மறுநாள் தனது நிலையை விளக்கி சொன்ன ஜி.பி.முத்து வேலை செய்யாதவர்களை விட்டு விட்டு என்னைப்போல் வேலை செய்பவர்களை வெளியேற்றினால் எப்படின்னு ஜனனிடம் சொன்னார்.

அன்று இரவு நடந்த கூட்டத்தில் ஜி.பி.முத்துக்கு பதிலாக தனலட்சுமியை ஜனனி வெளியே அனுப்பினார். ஜி.பி.முத்து மற்றவர்களுக்காக வேலை செய்வதும் இந்த கூட்டத்தில் பிரச்சனையாக மாறியது.

நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக மாறும் பிக்பாஸ் நிகழ்ச்சி

நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக மாறும் பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரசியமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதை சுவாரசியமாக மாற்றும் வேலையை பிக் பாஸ் திறமையாக செய்து வருகிறார். போன சீசனில் எந்தவித டாஸ்க்கும் கொடுக்காமல், அந்த டாஸ்கிலும் மொக்கையான டாஸ்க்காக கொடுத்து அனைவரும் எந்த வித முயற்சியும் எடுக்காமல் நீயும் நல்லவன் நானும் நல்லவன் என்பது போல் நடந்து கொண்டிருந்தனர். கமலஹாசனே ஒரு தடவை கடுப்பாகி எதையாவது செய்யுங்கப்பா, எல்லோரும் போன சீசனை பார்த்துட்டு வந்து ஒரு கருத்தும் சொல்லாத ஆட்களா இருக்கீங்களே என்று கோபித்துக் கொண்டார்.

சீசன் 5 போல் பஜனை பாட முடியாது...பிக்பாஸ் எச்சரிக்கை

சீசன் 5 போல் பஜனை பாட முடியாது...பிக்பாஸ் எச்சரிக்கை

அந்த அளவுக்கு எல்லோருக்கும், எல்லோரும் நல்லவரே என்பது போல இருந்தார்கள். ஆனால் இந்த சீசனில் பிக் பாஸ் ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தை சொல்லிவிட்டார். கடந்த 5 சீசன் மாதிரி இந்த சீசன் இருக்காது பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். ஏதோ விளையாட்டுக்காக சொல்கிறார் என்று பார்த்தால் இல்லை உண்மையாகவே அந்த விஷயத்தை அவர் சொல்லி இருக்கிறார்.

தினம் தினம் டாஸ்க், ரிவ்யூ, கோஷ்டி

தினம் தினம் டாஸ்க், ரிவ்யூ, கோஷ்டி

அதாவது தினம் தினம் டாஸ்க், தினம் தினம் டாஸ் குறித்த ரிவ்யூ, அதில் ஏவிக்ஷனுக்காக 4 பேர். அன்று நடக்கும் டாஸ்கில் சரியாக செயல்படாதவர்களை வெளியே அனுப்பிவிட்டு வெளியில் இருப்பவர்களை உள்ளே அழைத்துக் கொள்ளும் நடைமுறையால் நான்கு அணிகளுக்குள் பெரிய பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. அணி தலைவர்கள் மீது குழுவில் உள்ள மற்றவர்கள் கோபிக்கும் நிலை ஏற்படுகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல் கோஷ்டி சேர்ந்த கிளீனிங் டீம் தலைவி ஜனனியிடம் ஜிபி முத்துவை பற்றி கண்டதையும் சொல்லி அன்று இரவு ஆயிஷாவுக்கு பதில் ஜிபி.முத்துவை வெளியே அனுப்பினார்கள்.

ஜி.பி.முத்துக்கு கிடைத்த நீதி

ஜி.பி.முத்துக்கு கிடைத்த நீதி

அதனால் ஜிபி.முத்து நாமினேஷன் லிஸ்டில் வந்து விட்டார். மறுநாள் காலை ஜனனியை சந்தித்த ஜிபி.முத்து விளக்கம் கொடுத்தவுடன், நேற்று இரவு நடந்த ரிவியூ மீட்டிங்கில் ஜிபி.முத்துவை உள்ளே அழைத்துக் கொண்ட ஜனனி அதற்கு பதில் தனலட்சுமி வெளியே அனுப்பினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. ஜி.பி.முத்து எதிராக செய்யப்பட்ட அநீதி ஒரே நாளில் கலந்ததால் அவர் நிம்மதியாக வலம் வந்ததை பார்க்க முடிந்தது மறுபுறம் தனலட்சுமி இதுகுறித்து கடுமையான கோபத்தில் இருப்பதையும் காண முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X