»   »  கிராமத்து மக்களை நெகிழ வைத்த ஜி.வி.பிரகாஷ்!

கிராமத்து மக்களை நெகிழ வைத்த ஜி.வி.பிரகாஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் : இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் இப்போதெல்லாம் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். சமூக சேவைகளிலும் ஆர்வம் உள்ளவராகத் தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.

திடீரென கிராமத்துக்கு விசிட் அடிப்பது, குழந்தைகளைக் கொஞ்சுவது, முதியவர்களை கட்டிப்பிடிப்பது என்று மக்களுக்கு நெருக்கமாகிறார். நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் வீட்டுக்கு சென்ற முதல் திரைப் பிரபலம் ஜி.வி.பிரகாஷ் தான்.

G V Prakash helps a village

விழுப்புரம் அருகே உள்ள தைலாபுரத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளிக்கு கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளார் ஜி.வி.பி. அதனை நீங்கள் தான் திறந்து வைக்க வேண்டும் என்று கிராமத்து மக்கள் வற்புறுத்தவே தைலாபுரத்துக்குக் கிளம்பிப் போனார்.

நிகழ்ச்சி நடந்த அன்று அந்த ஊர் கிராமத்து மக்களின் அன்பில் நெகிழ்ந்து போய்விட்டாராம் ஜி.வி.பி. தைலாபுரத்து மக்களே விருந்து கொடுக்க ஆசைப்பட்டு, கடைசியில் ஒருவர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல, அவரின் வீட்டுக்குச் சென்று தரையில் அமர்ந்து சாப்பிட்டார்.

மதிய உணவை முடித்துக் கொண்டு கிராமத்தின் அருகில் இன்னொரு அரசு பள்ளிக்கு சென்று, அங்கு படிக்கும் குழந்தைகள், ஆசிரியர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

English summary
G.V.Prakash has built toilets to a government school in Thailapuram near Villupuram.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil