»   »  சத்யராஜ்-ரோபோ சங்கருடன் 'கூட்டணி' அமைத்த ஜி.வி.பிரகாஷ்!

சத்யராஜ்-ரோபோ சங்கருடன் 'கூட்டணி' அமைத்த ஜி.வி.பிரகாஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

'டார்லிங்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் காட்டில் தற்போது அடைமழை பொழிந்து வருகிறது. நடிகராக அறிமுகமான 2 வருடங்களில் 4 படங்கள் அவரது நடிப்பில் வெளியாகி விட்டன.

G.V.Prakash Join Hands with Sathyaraj

தற்போது 'கடவுள் இருக்கான் குமாரு', 'புரூஸ்லீ' படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக 2 புதிய படங்களில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷின் புதிய படமொன்றிற்கு நேற்று பூஜை போடப்பட்டது. அவரின் 8 வது படமாக உருவாகவிருக்கும் இதனை 'ஆடுகளம்' கதிரேசன் தயாரிக்கிறார்.

சண்முகம் முத்துசாமி இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து சத்யராஜ்,தம்பி ராமையா, ரோபோ சங்கர், ஆர்ஜே அஜய், ஆர்ஜே பிளேடு சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க விவேக் ஹர்ஷன் எடிட்டராக ஒப்பந்தமாகியிருக்கிறார். விரைவில் இப்படத்திற்கான நாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'பொல்லாதவன்', 'ஆடுகளம்' என வரிசையாக தனுஷ் படங்களைத் தயாரித்த கதிரேசன் இப்படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
G.V.Prakash to Share Screen space with Sathyaraj for his Upcoming Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil