71st National Film Awards: ஜி.வி பிரகாஷ், எம்.எஸ் பாஸ்கர், ஊர்வசி தேசிய விருதை பெற்றனர்!
டெல்லி: இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954 ஆம் ஆண் டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதானது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு, 2023 ஆம் ஆண்டுக்கான 71 வது தேசிய திரைப்பட விருது கடந்த மாதம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் குடியரசுத் தலைவர் திரௌதி முர்மு வழங்கி வருகிறார்.

இந்த வகையில், தனுஷ் நடித்த 'வாத்தி' படத்தில் சிறப்பான இசையை அமைத்தற்காக சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் கையால் தேசிய விருதை ஜிவி பிரகாஷ் பெற்றார். ஜி.வி.பிரகாஷூக்கு இது இரண்டாவது தேசிய விருதாகும். இதற்கு முன் சூரரைப்போற்று படத்தின் பின்னனி இசைக்கு வழங்கப்பட்டது.

எம்.எஸ்.பாஸ்கர் விருதை பெற்றார்: இதைத்தொடர்ந்து சிறந்த தமிழ் படம் , சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை 'பார்க்கிங்' படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பெற்றார். மேலும், அப்படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ். பாஸ்கர் பெற்றார். அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடித்த பார்க்கிங் திரைப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

சிறந்த நடிகை ஊர்வசி: மேலும், நடிகை ஊர்வசி மற்றும் பார்வதி இருவரும் இணைந்து நடித்த 'உள்ளொழுக்கு' என்ற திரைப்படம் சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருதை படத்தின் இயக்குநர் சுதீப்தோ சென் பெற்றார். அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை ஊர்வசி சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார். விருதை பெற்றவர்களுக்கு இணையத்தின் வழியாக பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











