»   »  முன்னணி இயக்குநர்களின் நாயகனாக மாறும் ஜி.வி.பிரகாஷ்?

முன்னணி இயக்குநர்களின் நாயகனாக மாறும் ஜி.வி.பிரகாஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி வெற்றிப்படமாக மாறிய, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் 2 வது பாகத்தில், ஜி.வி.பிரகாஷை நடிக்க வைக்க பாண்டிராஜ் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார்.

சிவகார்த்திகேயன், விமல், பிந்து மாதவி, ரெஜினா மற்றும் சூரி நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.

G.V.Prakash Next Team up with Pandiraj

இந்நிலையில் இப்படத்தின் 2 வது பாகத்தை எடுக்க இயக்குநர் பாண்டிராஜ் முடிவு செய்திருக்கிறார். 2 வது பாகத்தில் ஜி.வி.பிரகாஷை நாயகனாக நடிக்க வைக்க பாண்டிராஜ் ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் மற்றொரு நாயகனாக ஜி.வி.யுடன் யாரை நடிக்க வைக்கலாம் என்ற பரிசீலனையிலும் பாண்டிராஜ் இறங்கியுள்ளார். முதல் பாகம் போலவே 2 வது பாகத்திலும் நகைச்சுவை சற்று தூக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அதற்கேற்றவாறு ஒரு ஹீரோவை பாண்டிராஜ் தேர்வு செய்யவிருப்பதாக கூறுகின்றனர். மற்றொரு நாயகன் மற்றும் நடிகைகளைத் தேர்ந்தெடுத்த பின் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.

ஏற்கனவே இயக்குநர் ராஜேஷின் கடவுள் இருக்கான் குமாரு பட வாய்ப்பைக் கைப்பற்றிய ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக பாண்டிராஜ் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இதன் மூலம் முன்னணி இயக்குநர்களின் விருப்ப நாயகனாக ஜி.வி.பிரகாஷ் மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகர்களுக்கு இணையாக கையில் அரைடஜன் படங்களை வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், விரைவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

English summary
Sources Said G.V.Prakash Next Team Up with Director Pandiraj for Kedi Billa Killadi Ranga 2.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil