»   »  ஜி.வி.பிரகாஷின் படத்தை அவரது குடும்பத்தினரே பார்க்கவில்லையாம்!

ஜி.வி.பிரகாஷின் படத்தை அவரது குடும்பத்தினரே பார்க்கவில்லையாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தை உங்கள் குடும்பத்தினர் பார்த்தார்களா என்று கேட்டதற்கு நான் அவர்களைப் பார்க்க விடவில்லை என்று தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

கடந்த மாதம் வெளியாகி இளைஞர்களிடம் வரவேற்பையும், குடும்ப ரசிகர்களிடையே எதிர்ப்பையும் ஒருசேர பதிவு செய்தது ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் வெளியான த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா திரைப்படம்.


G.V.Prakash's Family has Not Seen His Latest Movie

ஏ சான்றிதழ் வாங்கிய இந்தப் படம் வசூலில் குறை வைக்காமல் தயாரிப்பாளர்கள் மனதில் பாலை வார்த்தது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்ததால் எனது மதிப்பு குறையவில்லை.


நான் தொடர்ந்து இது மாதிரிப் படங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். இது முற்றிலும் இளைஞர்களுக்கான படம் அதனால் தான் இளைஞர்களை மட்டுமே குறி வைத்து படத்தை விளம்பரப்படுத்தினோம்" என்று கூறினார்.


உங்கள் குடும்பத்தினர் மற்றும் மனைவி த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தைப் பார்த்தார்களா என்ற கேள்விக்கு நான் அவர்களை பார்க்க விடவில்லை என கூறியுள்ளார்.

English summary
G.V.Prakash's Wife And his Family Members has Not Seen His Latest Movie Trisha Illana Nayanthara he Says in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil