»   »  இரட்டைக் குதிரையில் பயணித்தாலும் முத்திரை பதிக்கும் ஜி.வி.பிரகாஷ்

இரட்டைக் குதிரையில் பயணித்தாலும் முத்திரை பதிக்கும் ஜி.வி.பிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிப்பு, இசை என இரண்டிலுமே வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

வசந்தபாலனின் 'வெயில்' மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், 'டார்லிங்' மூலம் நாயகனாக மாறினார்.

இந்நிலையில் இவர் இசையமைத்து வெளியான 7 படங்கள் தொடர் வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

குசேலன்

குசேலன்

இசையமைக்க வந்த 2 வது ஆண்டிலேயே ரஜினி பட வாய்ப்பைக் கைப்பற்றி கோலிவுட்டினரை திரும்பிப் பார்க்க வைத்தவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து இவர் இசையமைத்து வெளியான 'மதராசப்பட்டினம்','ஆடுகளம்', 'சகுனி', 'தெய்வத் திருமகள்', 'மயக்கம் என்ன' போன்ற படங்களின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது. இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் என்ற அங்கீகாரம் குறுகிய காலத்திலேயே இவருக்குக் கிடைத்தது.

டார்லிங்

டார்லிங்

எவ்வளவு நாள் தான் இசையமைப்பாளராக இருப்பது என்று நினைத்த ஜி.வி.பிரகாஷ் 'பென்சில்' படத்தில் நாயகனாக மாறினார். ஸ்கூல் பையனாக நடித்த 'பென்சில்' வெளியாவதற்குள், 'டார்லிங்' வெளியாகி ஜி.வி.பிரகாஷை நாயகனாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டது. மேலும் 'ஐ', 'ஆம்பள' என 2 பெரிய படங்களுடன் மோதி ஜி.வி.பிரகாஷ் பெற்ற வெற்றி ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

திரிஷா இல்லேன்னா நயன்தாரா

திரிஷா இல்லேன்னா நயன்தாரா

ஏ சான்றிதழுடன் இவரின் 2 வது படமாக வெளியான 'திரிஷா இல்லேன்னா நயன்தாரா' வசூலைக் குவித்ததில், தமிழ் சினிமாவின் முழுநேர நடிகராக மாறிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். இதனால் இவரின் முதல் திரைப்படமான பென்சிலுக்கும் விடிவுகாலம் பிறந்திருக்கிறது. 'டார்லிங்','திரிஷா இல்லேன்னா நயன்தாரா' படங்களைத் தொடர்ந்து வருகின்ற 22ம் தேதி 'பென்சில்' வெளியாகிறது.

7 படங்கள்

7 படங்கள்

2015-16 ல் ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான 'டார்லிங்', 'திரிஷா இல்லேன்னா நயன்தாரா', 'கொம்பன்', 'காக்கா முட்டை', 'ஈட்டி', 'விசாரணை', 'தெறி' என 7 படங்களும் வரிசையாக ஹிட்டடித்துள்ளன. நாயகன், இசையமைப்பாளர் என இரண்டிலுமே ஸ்கோர் செய்வதால் ஜி.வி.பிரகாஷின் மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இரட்டைக் குதிரை

இரட்டைக் குதிரை

நடிப்பு, இசை என இரட்டைக் குதிரையில் சவாரி செய்துவரும் ஜி.வி.பிரகாஷின் கைவசம், தற்போது ஏகப்பட்ட படங்கள் உள்ளன. இதில் இவர் இசையமைக்கும் படங்களை விட நடிக்கும் படங்களே அதிகம் உள்ளது. கூடிய விரைவில் ஜி.வி.பிரகாஷ் முழுநேர நடிகரானாலும் ஆச்சரியமில்லை.

English summary
Music and Acting G.V.Prakash Successful for Both Industries.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil