»   »  ரஜினி, அஜீத்துடன் ஜி.வி.பிரகாஷ் பணியாற்ற வேண்டும்.. விவேக் விருப்பம்!

ரஜினி, அஜீத்துடன் ஜி.வி.பிரகாஷ் பணியாற்ற வேண்டும்.. விவேக் விருப்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி, அஜீத்துடன் ஜி.வி.பிரகாஷ் பணிபுரிய வேண்டும் என நடிகர் விவேக் கூறியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் 50 வது படமாக வெளியான 'தெறி' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் நன்றாக இருப்பதாக ஜி.வி.பிரகாஷை பலரும் பாராட்டி வருகின்றனர்.

G.V.Prakash should score Music for Rajini Ajith Movies says Vivek

சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த நடிகர் விவேக், ''ஜி.வி.பிரகாஷ் ரஜினி, அஜீத்துடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

நான் அனிருத்தின் ரசிகன். ஆனால் திறமை எங்கிருந்தாலும் போற்றப்பட வேண்டும்'' என்று கூறியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் தற்போது 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தில் பிஸியாக இருக்கிறார்.

இதுதவிர 'புரூஸ்லி', 'கடவுள் இருக்கான் குமாரு', சசியின் பெயரிடப்படாத படம் என ஏகப்பட்ட படங்கள் அவரின் கைவசம் இருக்கின்றன.

இதனால் 'தெறி'க்குப் பின் வேறு புதிய படங்கள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Vivek says ''gvprakash I personally feel that gvp shd score music for Ajith n Rajini sir too!I m a fan of Ani but I still say this. Talent shd b praised''.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil