»   »  கடவுள் இருக்கான் குமாரு: 3 வது முறையாக கூட்டணி அமைத்த ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி

கடவுள் இருக்கான் குமாரு: 3 வது முறையாக கூட்டணி அமைத்த ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'திரிஷா இல்லேன்னா நயன்தாரா', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி இணைந்து நடிக்கவுள்ளனர்.

'திரிஷா இல்லேன்னா நயன்தாரா' படத்திற்குப் பின் இனிமேல் ஜி.வி.பிரகாஷுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன், என்று ஆனந்தி திட்டவட்டமாக அறிவித்தார்.

G.V.Prakash Team up with Anandhi

இதைத்தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ், ஆனந்தியுடன் சமாதானம் பேச 2 வது முறையாக, 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தனர்.

இந்நிலையில் தற்போது 3 வது முறையாக இந்த ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கிறது. டாஸ்மாக் புகழ் ராஜேஷ் இயக்கி வரும் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி, அவிகா கோர் நடித்து வந்தனர்.

இந்தப் படத்திலிருந்து பாலிவுட் நடிகை அவிகா கோர் விலகிக்கொள்ள தற்போது ஆனந்தி அவருக்குப் பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஜி.வி.பிரகாஷின் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said G.V.Prakash-Anandhi 3rd Team up for Kadavul Irukan Kumaru.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil