அடுத்த ஹிட் கன்ஃபார்ம்...சூர்யா படங்களில் மீண்டும் இணையும் ஜிவி பிரகாஷ்
சென்னை : இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக வளர்ந்தவர்களில் ஜி.வி.பிரகாஷும் ஒருவர். இசை, படங்கள் என இரண்டிலும் இவருக்கு வாய்ப்புக்கள் அடுத்தடுத்து குவிந்து வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று என அனைத்திலும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். சிறந்த இசைக்காக இந்த படங்கள் விருதுகளை வென்றுள்ளன. ஜி.பி.பிரகாஷ் இசையமைக்கும் படங்கள் வரிசையாக ஹிட்டாகி, விருதுகளையும் பெற்று வருகின்றன.

டிமாண்ட் மியூசிக் டைரக்டர்
இதனால் தமிழ் சினிமாவில் அதிகம் டிமாண்ட் ஆன இசை அமைப்பாளர்களில் ஒருவராக ஜி.வி.பிரகாஷும் மாறி உள்ளார். கார்த்தியின் சர்தார், தனுஷ் நடிக்கும் மாறன், அருண் விஜய் நடிக்கும் யானை போன்ற பல படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்து வருகிறார்.

சிறந்த இசையமைப்பாளர்
சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான சைமா விருதினை ஜி.வி.பிரகாஷ் வென்றுள்ளார். சூரரைப் போற்று படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த இரண்டு படங்களிலும் இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகி உள்ளார். சூர்யாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2 படங்களில் தான் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறாராம்.

சூர்யாவின் 2 படத்தில் ஜிவி
டைரக்டர் பாலா இயக்கும் புதிய படத்தை சூர்யா தான் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங் இந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட உள்ளது. பெயரிடப்படாத இந்த படத்தில் லீட் ரோலில் அதர்வாவும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதர்வாவிற்கு பதில் சூர்யாவை ஹீரோவாக நடிக்க வைக்க பாலா நினைத்துள்ளாராம். சூர்யா நடிக்கும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்க உள்ளார்.
Recommended Video

5 வது முறையாக வெற்றிமாறன் படம்
இதைத் தொடர்ந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் சூர்யாவின் மற்றொரு படமான, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் ஐந்தாவது படம் இதுவாகும்.

இத்தனை படங்களில் ஹீரோ
இசையமைப்பதுடன் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். செல்ஃபி, காதலிக்க யாருமில்லை, 4ஜி, ஐங்கரன், அடங்காதே, ஜெயில், இடி முழக்கம் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆயிரம் ஜென்மங்கள், பாச்சுலர் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











