»   »  கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...எம்ஜிஆர் பாடலுடன் ஓபனிங் காணும் ஜி.வி.பிரகாஷ்

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...எம்ஜிஆர் பாடலுடன் ஓபனிங் காணும் ஜி.வி.பிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த நடிகர் எம்ஜிஆர் அவர்களின் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் பாடலை தனது நடிப்பில் உருவாகி வரும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் பயன்படுத்துகிறார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.

டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தைத் தொடர்ந்து தற்போது சாம் ஆண்டனின் இயக்கத்தில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

G.V.Prakash Use M.G.R Song

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தியுடன் இணைந்து நடித்து வரும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் எம்ஜிஆரின் புகழ்பெற்ற பாடலான கண்ணை நம்பாதே பாடலை தனது ஓபனிங் பாடலாக பயன்படுத்த இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் இன்றளவும் காலத்தைக் கடந்த ஒரு பாடலாக திகழ்ந்து வருகிறது.

இந்தப் பாடலை காலத்திற்கு தகுந்தவாறு நா.முத்துக்குமார் எழுத, ஒளிப்பதிவாளர் பாபா சங்கர் இந்தப் பாடலை படம்பிடிக்க உள்ளார். டார்லிங் படத்தைத் தொடர்ந்து சாம் ஆண்டன் - ஜி.வி.கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறுகிறார் ஜி.வி.பிரகாஷ்.

English summary
After Huge Hit of Darling now G.V.Prakash Again Team Up with Sam Anton. G.V.Prakash use MGR's Very Famous Song Kannai Nambathey Unnai Emattrum his Introduction Song of this Movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil