twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குற்றச் செயல்களை ஊக்குவிக்கிறதா கானா பாடல்கள்? விபரீதம் புரியாத பாடகர்கள்

    |

    சென்னை : கானா பாடல்கள் என்பது வடசென்னைக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கே சிறப்பானவையாக கருதப்படுகின்றன.

    இந்தப் பாடல்களை அதிகமான இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் விரும்பி பாடும் சூழல் காணப்படுகிறது.

    சினிமாவிலும் இந்தப் பாடல்கள் அநேகமான படங்களில் கையாளப்பட்டு ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக உள்ளது.

    அஜித் இப்போ என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா...வெளியானது லேட்டஸ்ட் போஸ்ட் அஜித் இப்போ என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா...வெளியானது லேட்டஸ்ட் போஸ்ட்

    வடசென்னையின் அடையாளம்

    வடசென்னையின் அடையாளம்

    வடசென்னையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது கானா பாடல்கள். 90களில் தேனிசை தென்றல் என்று போற்றப்பட்ட இசையமைப்பாளர் தேவா, கானா பாடல்களின்மூலமே தன்னுடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். சினிமாக்களில் கானா பாடல்களுக்கு எப்போதுமே மவுசு காணப்படுகிறது.

    தனிக் கச்சேரிகள்

    தனிக் கச்சேரிகள்

    இதுமட்டுமின்றி தனியாகவும் கானா பாடல்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனிப்பட்ட முறையில் மேடைக் கச்சேரிகளின் மூலம் பட்டையை கிளப்பும் பாடகர்களும் காணப்படுகின்றனர். இவர்கள் சினிமாவிலும் தனக்கென தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் பட்டாளங்களை வைத்துள்ளனர்.

    கானா பாலா

    கானா பாலா

    இதில் குறிப்பிட்டு சொல்லும்படியாக கானா பாலா உள்ளார். இவரது குரலில் பீட்சா, அட்டக்கத்தி மற்றும் வடசென்னை போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் வழிதவறும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் களமாக கானா பாடல்கள் அமைவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    குற்றவாளிகளிடம் கானா பாடல்கள்

    குற்றவாளிகளிடம் கானா பாடல்கள்

    குற்றச்செயல்களில் ஈடுபடும் இத்தகையவர்களின் செல்போன்களில் கானா பாடல்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாக மாதவரம் டெபுடி கமிஷனர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார். சமீபத்திய கைது நடவடிக்கைகளின் மூலம் இவை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தவறான பாடகர்கள்

    தவறான பாடகர்கள்

    வாழ்வியலை 75 சதவிகிதம் இத்தகைய பாடல்கள் தெரிவித்தாலும், பல கானா பாடகர்கள், தங்களது புகழ் மற்றும் வரவிற்காக குற்றங்களுக்கான வாய்ப்பை இந்த பாடல்களின் மூலம் இளைஞர்களிடம் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    பாடகர்களிடம் விழிப்புணர்வு

    பாடகர்களிடம் விழிப்புணர்வு

    இதுகுறித்து சமீபத்தில் கானா பாடகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களை செய்யும் இளைஞர்களுக்கு இத்தகைய பாடகர்கள் அவர்களுக்கே தெரியாமல் வழிகாட்டிகளாக மாறிவருவதும் நடைபெற்று வருகிறது.

    போதையை குறிக்கும் மிட்டாய்

    போதையை குறிக்கும் மிட்டாய்

    சில கானா பாடல்களின் வரிகள் மற்றும் காட்சிகள் போதை பழக்கம், செயின் பறிப்புகள், கொலை மற்றும் குற்றச் செயல்களை சாதாரணமாக்கி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மிட்டாய் என்ற கானா பாடல் சமூக வலைதளங்களில் 2.3 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. இந்தப் பாடல் மூலம் எவ்வாறு போதைப்பொருளை வாங்குவது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மிட்டாய் என்பது போதைப்பொருளை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

    கஞ்சா புகைக்கும் பழக்கம்

    கஞ்சா புகைக்கும் பழக்கம்

    இதேபோல, மூளையை மயக்கும் தம்மு பாடல் கஞ்சா புகைப்பதை நியாயப்படுத்துகிறது. சாணா புடிச்ச கத்தி பாடல் கொலையை ஊக்குவிக்கும் வகையிலும் 75 /307 பாடல் சிறிய குற்றவாளிகள் மற்றும் பெரிய அளவிலான குற்றங்களை செய்பவர்கள்மீது போடப்படும் வழக்குப்பிரிவு குறித்து சொல்கிறது.

    பாடல்களை நீக்கிய காவல்துறை

    பாடல்களை நீக்கிய காவல்துறை

    இத்தகைய குற்றங்களை விவரிக்கும் கானா பாடல்களை யூடியூபில் இருந்து போலீசார் நீக்கியுள்ளனர். மேலும் இளையத் தலைமுறையினரை இந்தப் பாடல்கள் எவ்வாறு தவறாக வழிநடத்துகிறது என்பது குறித்தும் இத்தகைய பாடகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அந்த பாடல்களை நீக்க உறுதி அளித்துள்ளனர்.

    சமூகத்தில் விஷத்தை ஏற்றும் பாடகர்கள்

    சமூகத்தில் விஷத்தை ஏற்றும் பாடகர்கள்

    இதனிடையே, அநேகமான கானா பாடல்கள் இறப்பையொட்டியே வெளியாவதாக தெரிவித்துள்ள கானா பாலா, புகழுக்காகவும் பணத்திற்காகவும் ஒரு சில பாடகர்கள சமூகத்தில் இத்தகைய விஷத்தை கானா பாடல்கள் மூலம் ஏற்றி வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

    English summary
    Chennai police cracked down and blocked 100 crime related Gaana songs in youtube
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X