»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜயகாந்த் நடித்துள்ள கஜேந்திரா படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.

கஜேந்திரா படத்தை வி.ஏ.துரை எந்த நேரத்தில் ஆரம்பித்தாரோ தெரியவில்லை, சிக்கல் மேல் சிக்கலாக வந்துகொண்டிருக்கிறது. படம் முக்கால் வாசி முடிந்த நிலையில், விஜயகாந்த் அரசியல்வாதிகளைக் கண்டித்து பேசியதுபெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இதனையடுத்து படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று பாமகவினர் பிரச்சினையைக் கிளப்ப, வி.ஏ.துரைகாலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கூத்தாடி ராமதாஸிடம் அனுமதி வாங்கினார். படம் சீக்கிரம் வெளியாகி விடும்என்ற நிலையில் இப்போது பைனான்ஸியர் ஜஸ்வந்த் பண்டாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் படத்திற்குஎதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

வி.ஏ.துரை கஜேந்திரா படம் எடுக்க என்னிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கியிருந்தார். அக் கடனைத் திருப்பித் தந்துவிட்டுத்தான் அவர் படத்தை வெளியிட வேண்டும் என்று சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.அதனையடுத்து படம் வெளியிட தடைவிதிக்கப்பட்டது.

இப்போது என்னை சமாதானமாக போக அழைக்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எனவே படத்தைவெளியிட தடை விதிக்க வேண்டும். வி.ஏ.துரை தர வேண்டிய பணம் தொடர்பான வழக்கை கீழ்க்கோர்ட்டுசரியான முறையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் நாளை (14.09.04) விசாரணைக்கு வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil