»   »  ஆர்யாவின் 'கஜினிகாந்த்' - இயக்குநருக்கும் ஸ்டூடியோ கிரீனுக்கும் இடையே பக்கா கெமிஸ்ட்ரி!

ஆர்யாவின் 'கஜினிகாந்த்' - இயக்குநருக்கும் ஸ்டூடியோ கிரீனுக்கும் இடையே பக்கா கெமிஸ்ட்ரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆர்யா சமீபத்தில் நடித்து வெளியான படங்கள் எல்லாம் தோல்வியைத் தழுவின. அவர் மிகவும் கடினமாக உழைத்த 'கடம்பன்' படமும் வசூலில் ஏமாற்றத்தையே தந்தது.

இந்நிலையில், அடுத்தபடியாக ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார் ஆர்யா. இந்தப் படத்திற்கு 'கஜினிகாந்த்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

'ஹர ஹர மஹாதேவகி' படத்தைத் தொடர்ந்து 'இருட்டு அறையில் முரட்டுகுத்து' படத்தை இயக்கும் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இப்படத்தை இயக்க இருக்கிறார்.

கஜினிகாந்த்

ஆர்யா ஜோடியாக 'வனமகன்' சாயிஷா நடிக்கிறார். பாலமுரளி இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம், ஜனவரியில் துவங்குகிறது. படத்திற்கு 'கஜினிகாந்த்' என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படம் நானி நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து வெற்றிபெற்ற 'பலே பலே மஹாடிவொய்' படத்தின் ரீ-மேக் என கூறப்படுகிறது.

இயக்குநர் சந்தோஷ்

இயக்குநர் சந்தோஷ்

இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமாருக்கு கிடைத்த வாய்ப்பைபொ பார்த்து தமிழ் சினிமாவில் இப்படிக் கூட ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என திறமையான பல இயக்குனர்கள் ஆச்சரியப்பட்டும், அதிர்ச்சியடைந்தும் இருக்கிறார்கள். நேற்று முன்தினம் வந்த அறிவிப்புதான் அதற்குக் காரணம்.

ஸ்டூடியோ கிரீன்

ஸ்டூடியோ கிரீன்

தமிழ்த் திரையுலகின் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஸ்டூடியோ க்ரீன். இந்த நிறுவனம் இதுவரை சூர்யா, கார்த்தி ஆகியோரை வைத்துத்தான் அதிக படங்களைத் தயாரித்தது. தற்போது மற்ற ஹீரோக்களின் படங்களையும் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இயக்குநர் அறிமுகம்

இயக்குநர் அறிமுகம்

இந்நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்து வெளிவந்த 'ஹர ஹர மகாதேவகி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் பி. ஜெயக்குமார். அடுத்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தையும் சந்தோஷ் இயக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது.

ஹாட்ரிக்

ஹாட்ரிக்

இப்போது மூன்றாவது முறையாக சந்தோஷ் இயக்க ஆர்யா நடிக்கும் புதிய படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமே தயாரிக்கிறது. ஒரே நிறுவனத்தின் அடுத்தடுத்த மூன்று பட வாய்ப்புகளையும் சந்தோஷ் பெற்றுள்ளது திரையுலகத்தில் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

English summary
Arya is acting in a film produced by Studio Green Gnanavel Raja. The film is titled as 'Gajinikanth'. Santhosh P.Jayakumar has directed films 'Hara Hara Mahadevakhi' and 'Iruttu araiyil murattu kuththu' in the production of studio green. Surprisingly, Santhosh has doing three consecutive films for the same company.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil