காசு பணம் துட்டு மணி மணி: 'ஐடி'காரர்களுக்காக பாடிய கானா பாலா
சென்னை: சென்னையில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கானா பாலா பாட்டு பாடியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்புக்கு பிறகு படுபிசியாக உள்ள வருமான வரித்துறையினர் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து ரிலாக்ஸ் செய்துள்ளனர்.

அந்த அலுவலகத்தில் நடந்த கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதி, கானா பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கானா பாலா வருமான வரித்துறை அதிகாரிகளுக்காக பாடல் பாடியுள்ளார்.
லஷ்மண் ஸ்ருதி குழுவின் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. வருமான வரித்துறையினர் விஜய் சேதுபதி, கானா பாலாவுடன் புகைப்படம், செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
மேலும் இந்த இருவரிடமும் அதிகாரிகள் ஆட்டோகிராபும் வாங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











