Gandhi Kannadi Box Office: காந்தி கண்ணாடி முதல் நாள் வசூல்.. கேபிஒய் பாலாவுக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததா?
சென்னை: கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமான காந்தி கண்ணாடி படம் நேற்று வெளியானது. தனக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்யாமல் நல்ல கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என நினைத்ததே அவரை பலரும் பாராட்ட காரணமாக அமைந்துள்ளது. இயக்குநர் ஷெரீஃப் எடுத்துக் கொண்ட நல்ல கதையை முழுமையாக ரசிகர்களை என்டர்டெயின் பண்ணும் விதமாக கொடுக்காத நிலையில், படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
கேபிஒய் பாலா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில்ல் வெளியான காந்தி கண்ணாடி திரைப்படம் குறைவான தியேட்டர்களிலேயே வெளியானது. வெற்றிமாறனின் பேட் கேர்ள் படத்துக்கும் காந்தி கண்ணாடி படத்துக்கும் இடையே தான் போட்டி நிலவி வருகிறது என்கின்றனர்.

சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் ஏகப்பட்ட தியேட்டர்களை தமிழ் சினிமாவில் ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்த 2 படங்களின் வசூலும் ரொம்பவே டல் அடித்து காணப்படுகிறது.
கேபிஒய் பாலா ஹேப்பி: காமெடி நடிகராக கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி, விஜய் டிவியில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வந்த கேபிஒய் பாலா தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். ஷெரிஃப் இயக்கத்தில் வெளியான அவரது காந்தி கண்ணாடி படத்தை பார்த்த பலரும் அந்த கதையின் கருவுக்காக பாராட்டி வருவதை கேட்டு கேபிஒய் பாலா ஹேப்பியாகி உள்ளார்.
காந்தி கண்ணாடி முதல் நாள் வசூல்: பேட் கேர்ள் திரைப்படம் முதல் நாளில் 25 லட்சம் ஈட்டிய நிலையில், பாலாவின் காந்தி கண்ணாடி திரைப்படம் அதிகபட்சமாக 35 லட்சம் வசூல் செய்துள்ளதாக சாக்னிக் வெப்சைட் தகவல் தெரிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் படத்துக்கு வசூல் அதிகரித்தால் 1 கோடி ரூபாய் வசூலை காந்தி கண்ணாடி ஈட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஓடிடி விற்பனை, சாட்டிலைட் விற்பனை என போட்ட காசை எடுத்துவிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறுகின்றனர்.
மாஸ் காட்டிய மதராஸி: சிவகார்த்திகேயனின் மதராஸி படம் வசூலில் மாஸ் காட்டியுள்ளது. சிவ்கார்த்திகேயனுக்குப் போட்டியாக எல்லாம் படத்தை இறக்கவில்லை என்றும் அந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் என்னோட படத்துக்கு வந்து சிலர் பார்த்தால் அதுவே போதும் என பாலா சொன்னது போலவே அரங்கேறி வருகிறது. மக்களுக்கு ஓடி ஓடி உழைத்து வந்த பாலாவுக்கு குறைந்தபட்ச அளவில் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











