Gandhi Kannadi Box Office: 5 கோடி வசூலை நெருங்குமா காந்தி கண்ணாடி? 13வது நாள் வசூல் எவ்வளவு?

சென்னை: இந்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வெளியான கேபிஒய் பாலாவின் காந்தி கண்ணாடி படத்தின் பட்ஜெட்டை விட அதிக வசூலை அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும், கேபிஒய் பாலாவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக இந்த படம் மாறவில்லை என்றும் குறைவான பட்ஜெட்டில் வெளியாகி பெரிய வசூல் ஈட்டிய டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட படங்கள் போல இந்த படம் வசூல் சாதனை நடத்தவில்லை என்பது பாலாவுக்கும் அவரது படக்குழுவுக்கும் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடியனாக கலந்துக் கொண்டு சிவகார்த்திகேயனை போலவே விஜய் டிவியில் தொகுப்பாளராக உயர்ந்தவர் தான் பாலா. குறைந்த அளவு சம்பாதித்தாலும் அதை வைத்துக் கொண்டு அப்படியே பொது மக்களுக்கு உதவி வருகிறார்.

Gandhi Kannadi Day 13 Box Office Reports KPY Bala movie struggles to get 5 Crores at Box Office

சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் நல்லது செய்தாலும், இலவசமாக மருத்துவமனை கட்ட முடிவு செய்த நிலையில், ஏகப்பட்ட எதிர்ப்புகள் வருவது போல, நல்லது செய்ய பாலாவுக்கு பணம் எங்கே இருந்து வருகிறது என்றும் பாலா ஊரை ஏமாற்றுகிறார் என கூல் சுரேஷ் உள்ளிட்ட சில பிரபலங்களே அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தாலும் மக்கள் ஆதரவு பாலாவுக்கு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஹீரோவான பாலா: சின்னத்திரை மூலம் தமிழக மக்களை சிரிக்க வைத்து வந்த பாலா அடுத்ததாக வெள்ளித்திரை மூலம் அதை தொடர முயற்சித்து வருகிறார். விஜய் டிவியில் இருந்து ஏகப்பட்ட பிரபலங்கள் ஹீரோக்களாக உருவாகி வரும் நிலையில், அந்த வரிசையில் கேபிஒய் பாலாவும் தற்போது காந்தி கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். பல வாரிசு நடிகர்கள் படங்கள் இந்த ஆண்டு வெளியாகி ஃப்ளாப் ஆன நிலையில், பாலாவின் படம் லாபத்தை தான் கொடுத்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

5 கோடி வசூல் சாத்தியமா?: ஷெரிஃப் இயக்கத்தில் கேபிஒய் பாலா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான காந்தி கண்ணாடி திரைப்படம் இதுவரை 13 நாட்களில் 4.47 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக சாக்னிக் இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வார இறுதி நாட்களில் படம் வசூலை ஈட்டினால் 5 கோடி சாத்தியம் என்கின்றனர். 3.5 கோடி பட்ஜெட்டில் உருவான காந்தி கண்ணாடி படத்தின் பட்ஜெட்டை விட சற்றே கூடுதலாக வசூல் செய்துள்ளது. சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் உரிமம் மற்றும் ஆடியோ உரிமம் உள்ளிட்டவை மூலம் இந்த படம் மேலும் லாபத்தை ஈட்டும் என்கின்றனர். வார நாட்கள் என்பதால் தொடர்ந்து தினமும் 9 லட்சம் அளவிலான வசூலை இந்த படம் பெற்றுள்ளது. பல இடங்களில் படத்துக்கு சரியான தியேட்டர் கிடைக்கவில்லை என்றும் ஷோக்கள் ஒதுக்கப்படவில்லை என்றும் பாலாவை டார்கெட் செய்து சிலர் அடிப்பதாகவும் இயக்குநர் ஷெரிஃப் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

கூல் சுரேஷ் குற்றச்சாட்டு: பல படங்களுக்கு முதல் நாள் தியேட்டருக்கு வித விதமான கெட்டப்புகளில் சென்று படங்களை ப்ரோமோட் செய்து வரும் கூல் சுரேஷ் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார். தன்னை போல ஒருவர் ஹீரோவாக வருகிறார் என்கிற நிலையில், சப்போர்ட் செய்யாமல் பாலாவுக்கு எப்படி பணம் வருகிறது, அவருக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே சமயம் பாலா குறித்த விமர்சனங்களையும் பலரும் முன் வைத்துக் கொண்டு தான் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X