Gandhi Kannadi Day 4 Box Office: காந்தி கண்ணாடி 4வது நாள் வசூல்.. திங்கட்கிழமை படுத்துவிட்ட பாலா படம்!

சென்னை: போஸ்டர்களை கிழிக்கிறார்கள், பேனர்களை வைக்க விடமாட்டேங்கிறாங்க என கேபிஒய் பாலா மற்றும் அவரது படக்குழுவினர் வெடித்து பேசிய பிறகு காந்தி கண்ணாடி படத்தின் வசூல் சற்று ஞாயிற்றுக்கிழமை அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால், திங்கட்கிழமை அதள பாதாளத்திற்கு சென்று விட்டது.

சிவகார்த்திகேயனின் மதராஸி படம் ஞாயிற்றுக்கிழமை 10 கோடி வசூல் செய்த நிலையில், திங்கட்கிழமை 4 கோடியாக குறைந்தது. அதே நேரத்தில் கேபிஒய் பாலாவின் காந்தி கண்ணாடி திரைப்படம் திங்கட்கிழமை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது படக்குழுவை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Gandhi Kannadi Day 4 Box Office KPY Bala movie saw a major drop at Monday
Photo Credit:

பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, கேபிஒய் பாலா மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியானது. கடந்த வாரம் வெளியான படங்கள் எதுவுமே ரசிகர்களை கவரும் வகையில் இல்லை என்று விமர்சகர்கள் தொடர்ந்து கழுவி ஊற்றிய நிலையில், பொதுமக்களும் பல படங்களை தியேட்டர்களுக்குச் சென்று பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர்.

காந்தி கண்ணாடி 4 நாள் வசூல்: ஷெரீஃப் இயக்கத்தில் கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமான காந்தி கண்ணாடி படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. முதல் நாளில் வெறும் 35 லட்சம் வசூல் செய்த காந்தி கண்ணாடி சனிக்கிழமை 45 லட்சமும் ஞாயிற்றுக்கிழமை 65 லட்சமும் வசூல் செய்தது. தொடர்ந்து வசூல் அதிகரித்து வந்தது நல்ல வளர்ச்சியாக பார்க்கப்பட்ட நிலையில், வேலை நாளான திங்கட்கிழமை மீண்டும் படத்தின் வசூல் வெறும் 31 லட்சமாக குறைந்துவிட்டது.

இதுவரை எவ்வளவு?: இதுவரை மொத்தமாக கேபிஒய் பாலா நடிப்பில் வெளியான காந்தி கண்ணாடி திரைப்படம் 1.76 கோடி வசூலை ஈட்டியுள்ளது. சூரி, சிவகார்த்திகேயன், யோகி பாபு போல கேபிஒய் பாலாவும் தமிழ் சினிமாவில் கூடிய சீக்கிரமே நல்ல இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2ம் வாரமும் காந்தி கண்ணாடி படம் திரையரங்கில் ஓடும் நிலையில், அதிகபட்சமாக 5 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த படம்: கேபிஒய் பாலா தனது அடுத்த படத்தை தேர்வு செய்யும் முறையில் தான் அவரது சினிமா வாழ்க்கையே அடங்கியிருப்பதாக கூறுகின்றனர். கேபிஒய் புகழ் ஹீரோவாக நடித்த மிஸ்டர் ஜூ கீப்பர் படம் எல்லாம் வந்த சுவடே தெரியாத நிலையில், பாலா படம் பல ரசிகர்களை கனெக்ட் செய்து தியேட்டர்களில் கிளைமேக்ஸில் கண் கலங்கவும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X