Gandhi Kannadi Box Office: இரண்டாம் நாளில் ஏற்றம் கண்ட காந்தி கண்ணாடி..2நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: ஷெரிஃப் இயக்கத்தில் கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் காந்தி கண்ணாடி. இதில், பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, அமுதவாணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதால், படத்தின் வசூல் முதல் நாளை விட இரண்டாம் நாள் கணிசமாக அதிகரித்துள்ளது.

காமெடியால் நம்மை மகிழ்வித்து வந்த கே.பி.ஒய் பாலா, இந்த திரைப்படத்தில் அழுத்தமான ரோலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். பாலா ஜோடியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். பாலா தனது நண்பர்களுடன் சேர்ந்து ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வருகிறார். இதில், சிறிய காதுகுத்து முதல் திருமணம் வரை எதுவாக இருந்தால், பட்ஜெட்டிற்கு ஏற்றார் போல செய்து கொடுத்துவிடுவார்கள். பாலாவிற்கு பணம் மிகவும் முக்கியமான ஒன்று என்பதால், பணத்திற்காக கடுமையாக உழைக்க தயாராக இருக்கிறார்.

gandhi kannadi KPY Bala box office
Photo Credit:

காந்தி கண்ணாடி: மற்றொரு பக்கம் பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துவருகிறார்கள். பாலாஜி சக்திவேலுக்கு மனைவி ஆசைப்பட்ட ஒரு விஷயத்தை அவருக்காக செய்ய வேண்டும் என்பது ஆசை, இதற்காக பாலாஜி சக்திவேல், ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி வைத்து இருக்கும் பாலாவை தேடி வருகிறார். அந்த விஷயத்தை நடத்தி முடிக்க ஒரு பெரும் தொகை கேட்கிறார் பாலா. அதன் பின் என்ன நடந்தது.. பாலாஜி சக்திவேல் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றினாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை.

2ம் நாள் வசூல்: காந்தி கண்ணாடி திரைப்படம் முதல் நாளில் 35 லட்சத்தை வசூலித்த நிலையில், இரண்டாம் நாள் வசூல் 45 லட்சமாக உள்ளது. முதல் நாளை விட இரண்டாம் நாள் வசூல் சற்று அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் வெளியானதால், பலருக்கு காந்தி கண்ணாடி படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆனால், படத்திற்கு நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதால், படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X