»   »  காமராஜ் படத்தின் டீசர்... வெளியிட்டார் மகாத்மா காந்தியின் செயலாளர் கல்யாணம்!

காமராஜ் படத்தின் டீசர்... வெளியிட்டார் மகாத்மா காந்தியின் செயலாளர் கல்யாணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கர்மவீரர், பெருந்தலைவர் என்று மரியாதௌயுடன் அழைக்கப்பட்ட காமராஜரின் வாழ்க்கையைச் சொல்லும் காமராஜ் படத்தின் டீசரை மகாத்மா காந்தியின் செயலாளர் கல்யாணம் வெளியிட்டார்.

அ பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கியுள்ள படம் காமராஜ். ஏற்கெனவே இந்தப் படத்தில், புதிய காட்சிகள் சேர்த்து புதிய படமாகவே வெளியிடுகிறார் பாலகிருஷ்ணன்.

மகாத்மாவின் செயலாளர்

மகாத்மாவின் செயலாளர்

இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. இந்த டீசரை வெளியிட்ட பிறகு பேசிய கல்யாணம், "காமராஜர் மாதிரி ஒவ்வொரு அரசியல் வாதியும் இருந்தால் இந்த நாடு எப்பொழுதோ முன்னேறி இருக்கும். அரசியலுக்கு வருகிற ஒவ்வொருவருமே ஏதோ ஒரு ஆதாயத்தை எதிர் பார்த்துதான் வருகிறார்கள்.

ஊழல் பணம்

ஊழல் பணம்

ஒவ்வொரு எம்.எல்.ஏ, எம்.பி எல்லோருமே கோடி கோடியாக பணம் வைத்திருக்கிறார்கள். எல்லாமே ஊழல் பணம்தான். இந்த படத்தை நிச்சியமாக ஒவ்வொரு எம்.எல்.ஏ, எம்.பிக்களும் கட்டாயம் பார்க்க வேண்டும்," என்றார்.

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

சமுத்திரகனி பேசும் போது, "நேர்மையாக வாழ்ந்த ஒரு மனிதரின் வாழ்கையைப் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியவில்லை. இந்த படத்தை ஒவ்வொரு பள்ளி குழந்தைகளையும் பார்த்து எதிர்காலத்தில் காராஜர் போல் யாரவது வர மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது.

கண்ணீர்

கண்ணீர்

இந்த படத்தில் நான் நடித்த போது காமராஜரை பற்றி கேள்வி பட்ட விஷயங்கள் எனக்கு கண்ணீரை வரவழைத்தது இந்த படம் எனக்கு மறக்க முடியாத ஒரு படம்," என்றார்.

இயக்குநர் பாலகிருஷ்ணன்

இயக்குநர் பாலகிருஷ்ணன்

இயக்குனர்...அ பாலகிருஷ்ணன் பேசும்போது, "இந்த திரைப்படம் உருவாக மூப்பனார் அவர்களும் ஜி.கே.வாசன் இருவரும் உதவியாக இருந்தார்கள். இப்போது காமராஜர் பேரை சொல்லி அரசியல் செய்கிறவர்களின் ஆதரவு சுத்தமாக கிடைக்கவில்லை. அப்படி அவர்களது ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் இந்த படம் முழுமையாக மக்களிடம் சென்றடையும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

இந்த விழாவில் காமராஜராக நடித்த பிரதீப் மதுரம் மற்றும் வியோகஸ்தர் பாலசுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

English summary
The teaser of Kamaraj movie has been launched by Kalyanam, secretary of Mahathma Gandhi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil