Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆபாச வீடியோ பார்க்குமாறு கட்டாயப்படுத்தினேனா? பெண் கலைஞர் மீது நடன இயக்குனர் பதில் புகார்
மும்பை: ஆபாச வீடியோவை பார்க்குமாறு கட்டாயப்படுத்தியதாக புகார் கூறிய பெண் கலைஞர் மீது, நடன இயக்குனர் பதில் புகார் கொடுத்துள்ளார்.
தமிழில் ஜீவா, ஸ்ரேயா நடிப்பில் கோகுல் இயக்கிய படம் ரவுத்திரம். இதில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா.
சென்னையில் பிறந்த கணேஷ் ஆச்சார்யா, இப்போது இந்தி சினிமாவின் பிரபல நடன இயக்குனராக இருக்கிறார். இவர், கேஜிஎப், பத்மாவத், சர்கார் 3, பாஜிரோவ் மஸ்தானி, ரங் தே பசந்தி உட்பட ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். பல படங்களில் நடித்தும் உள்ளார்.

மீ டு புகார்
நடிகை தனுஶ்ரீ தத்தா, நடிகர் நானே படகேர் மீது மீ டு புகார் கூறியபோது இவர் மீதும் புகார் கூறியிருந்தார். இது பரபரப்பாகி இருந்தது. அப்போது தனுஶ்ரீயின் புகாரை கணேஷ் ஆச்சரியா மறுத்திருந்தாலும் தனுஶ்ரீ அவரை பொய்யர் என்று கூறியிருந்தார்.

ஆபாச வீடியோ
இந்நிலையில், 33 வயது பெண் நடன கலைஞர் ஒருவர், கணேஷ் ஆச்சார்யா மீது பரபரப்பு புகார் கூறினார். அதில், தன்னை ஆபாச வீடியோ பார்க்குமாறு கணேஷ் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணையம் மற்றும் அம்போலி காவல் நிலையத்தில் அவர் இந்தப் புகாரை கொடுத்திருந்தார்.

நடன இயக்குனர்
கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல இந்தி நடன இயக்குனர் சரோஜ்கான், நடன கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பில் இருந்து கொண்டு நடன கலைஞர்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுப்பதாக கணேஷ் ஆச்சார்யா மீது புகார் கூறியிருந்தார். இதை அவர் மறுத்திருந்த நிலையில் அந்தப் பெண் இந்தப் புகாரை தெரிவித்திருந்தார்.

ஆதாரமற்றவை
இந்நிலையில் அந்த நடன கலைஞரின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கணேஷ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, 'கடந்த 2007 ஆம் ஆண்டு அவர் குரூப் டான்சராக என் குழுவின் இருந்தார். அதற்கு பிறகு அவரை பற்றி எனக்குத் தெரியாது. அவர் கூறியுள்ள ஆபாச வீடியோ விவகாரம் ஜோடிக்கப்பட்டவை என்று தெரிவித்தார்.

மான நஷ்ட வழக்கு
அதோடு, பெண் நடன கலைஞர் பொய் புகார் கொடுத்துள்ளதாக அவர் மீது, ஓஷிவாரா மற்றும் அம்போலி காவல் நிலையங்களில், கணேஷ் ஆச்சார்யா புகார் கொடுத்துள்ளார். விரைவில் அவர் மீது மான நஷ்ட வழக்குத் தொடர இருப்பதாகவும் கணேஷின் வழக்கறிஞர் ரவி சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.