Ganesh Chaturthi: ’பெத்தி’ கணேஷ் ரெடி.. கூலி விநாயகர் எங்கேப்பா காணோம்.. களைகட்டும் விநாயகர் சதுர்த்தி!
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இன்றே பல விநாயகர் கோயில்களில் தோரணம் கட்டி, மைக் செட்டெல்லாம் போட்டு "ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வரவேண்டும்" உள்ளிட்ட பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் வித விதமான விநாயகர் சிலைகளை செய்து வீதிகளில் கோயில் அமைத்து பூஜைகள் நடத்தப்பட்டு கரைக்கப்படுவது வழக்கம். அதிலும், சினிமா படங்களில் வரும் முன்னணி நடிகர்களின் கதாபாத்திரங்கள் தொடர்பான விநாயகர் சிலைகளும் உருவாக்கப்படும் கபாலி விநாயகர் முதல் ஜெயிலர் விநாயகர் வரை இதுவரை வந்த நிலையில், கூலி விநாயகரையும் இந்நேரம் செய்திருப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

பாகுபலி விநாயகரை தொடர்ந்து தற்போது ராம்சரண் நடித்து வரும் பெத்தி விநாயகரும் டிரெண்டாகி வருகிறது.
பாலிவுட் முதல் கோலிவுட் வரை: முழு முதற் கடவுளாக கொண்டாடப்படும் விநாயகரின் பிறந்தநாளான விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் நாளை ஏகப்பட்ட பிரபலங்கள் கொண்டாட உள்ளனர். பாலிவுட்டில் ஷில்பா ஷெட்டி வருடா வருடம் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், இந்த ஆண்டு ஷில்பா ஷெட்டி வீட்டில் கணேஷ் சதுர்த்தி பண்டிகை கிடையாது என அறிவித்துள்ளார். ஆனால், வழக்கம் போல மற்ற பிரபலங்கள் கணேஷ் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். கோலிவுட் பிரபலங்களும் விநாயகர் சதுர்த்தியை தங்கள் இல்லங்களில் கொண்டாட உள்ளனர்.
பெத்தி விநாயகர்: ராம்சரண், ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகி வரும் பெத்தி படத்தில் ராம் சரண் கிரிக்கெட் விளையாடும் ப்ரோமோ ஒன்று வெளியாகி டிரெண்டான நிலையில், அதே லுக்கில் விநயகரை செய்து பெத்தி விநாயகர் சிலையை இந்த ஆண்டு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வைக்க உள்ளனர். அதன் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.
கூலி விநாயகர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் 500 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில், கூலி விநாயகரையும் இந்த ஆண்டு இந்நேரம் செய்து தமிழ்நாட்டில் சிலர் வழிபாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயகன் விநாயகர் கூட ரெடியானால் ரெடியாகி விடும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











