»   »  காதலியை மணந்தார் கணேஷ் வெங்கட்ராம்

காதலியை மணந்தார் கணேஷ் வெங்கட்ராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கணேஷ் வெங்கட்ராம் இன்று தனது நீண்ட நாள் காதலியான நிஷாவை கரம்பிடித்து மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

அபியும் நானும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கணேஷ் வெங்கட்ராம் தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன் மற்றும் தனி ஒருவன் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

Ganesh Venkatram Marriage Today

தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான நிஷாவைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரியில் கணேஷ் வெங்கட்ராம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை சென்னை ஈசிஆரில் உள்ள கேரள வீட்டில் ஹிந்து முறைப்படி கணேஷ் வெங்கட்ராம் - நிஷா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Ganesh Venkatram Marriage Today

இவர்களின் காதல் திருமணத்திற்கு ஏராளமான நட்சத்திரங்கள் நேரில் வந்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

35 வயதான கணேஷ் வெங்கட்ராம் தற்போது பள்ளிக்கூடம் போகாமலே,நாயகி மற்றும் கன்ஸ் ஆப் பெனாரஸ்(ஹிந்தி) ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

English summary
Actor Ganesh Venkatram Married Nisha Today,They tied the knot at Kerala House in (ECR) Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil