»   »  எல்லாமே ஃபிக்ஸ்டு: கணேஷ் வெங்கட்ராம்தான் பிக் பாஸ் வின்னராமே!

எல்லாமே ஃபிக்ஸ்டு: கணேஷ் வெங்கட்ராம்தான் பிக் பாஸ் வின்னராமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி 'போரடிக்கிறது' என்ற நிலையைத் தாண்டி, கடுப்பாகவும் அருவருப்பாகவும் உள்ளது என்று சொல்லும் நிலைக்குப் போய்விட்டது.

டாஸ்க் என்ற பெயரில் உள்ளே நடக்கிற விஷயங்கள் மகா கேவலமாக உள்ளதாக பலரும் கமெண்ட் அடித்துள்ளனர்.

Ganesh Venkatram may be the winner of Big Boss

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் வரை தாக்குப் பிடித்து தங்கி, நிகழ்ச்சியை வெல்லப் போவது யார் என்பது குறித்து தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த வீட்டில் இதுவரை எந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல், ஹாயாக இருப்பவர் கணேஷ் வெங்கட்ராம்தான். அவருக்கு எந்த நெருக்கடியுமே இல்லை. அதிகம் சாப்பிடுகிறார் என்ற சாதாரண குற்றச்சாட்டைத் தவிர, எந்த சர்ச்சையிலும் சிக்கவில்லை. இப்போது 74 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவர்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராகக் காட்டப்படுவார் என்று தகவல் கசிந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பப் பங்கேற்பாளர்களில் இன்னும் அந்த வீட்டில் தொடர்ந்து தங்கியிருப்பவர்கள் சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் வையாபுரி ஆகிய நால்வர்தான். ஆரம்பத்தில் தங்கியிருந்த பெண் பங்கேற்பாளர்கள் மொத்தமும் வெளியேறிவிட்டனர். அவர்களில் ஆர்த்தி, ஜூலி ஆகியோர் மட்டும் மீண்டும் திரும்பியுள்ளனர்.

English summary
Sources say that Ganesh Venkatram may be the winner of Big Boss

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil