»   »  கதாநாயகிக்குப் போட்டியாக கவர்ச்சியில் களமிறங்கிய கணேஷ் வெங்கட்ராமன்

கதாநாயகிக்குப் போட்டியாக கவர்ச்சியில் களமிறங்கிய கணேஷ் வெங்கட்ராமன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வழக்கமாக கதாநாயகிகள்தான் கவர்ச்சியில் தூக்கலாக தெரிவார்கள். ஆனால் நாயகன் கணேஷ் வெங்கட்ராமன் நாயகியோடு போட்டி போட்டு குத்துப்பாடல் ஒன்றில் கவர்ச்சி காட்டியுள்ளார். அச்சாரம் படத்தில்தான் இந்த காட்சி வந்துள்ளது.

விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும் கணேஷ் வெங்கட்ராமன் ஹீரோவாக நடித்து வரும் படம்தான் அச்சாரம். அபியும் நானும்', ‘உன்னைபோல் ஒருவன்', ‘பனித்துளி' உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், டிவி விளம்பரப்படங்களில் அதிகம் தலைகாட்டினார். தற்போது சின்ன இடைவேளைக்குப் பிறகு அச்சாரம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

பூனம் கவுர் ஜோடி

பூனம் கவுர் ஜோடி

கணேஷ் வெங்கட்ராமனுக்கு ஜோடியாக பூனம் கவுர் நடித்து வருகிறார். காதல் மற்றும் திரில்லர் கதையம்சம் உள்ள படமாக உருவாகும் இப்படத்தை மோகன் கிருஷ்ணா இயக்கிவருகிறார்.

தாரு நிஷா மூவீஸ் சார்பில் சங்கர பத்மா தயாரித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் விருந்தாக ரசிகர்களுக்கு அமையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசை

ஸ்ரீகாந்த் தேவா இசை

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இவருடைய இசையில் குத்துப்பாடல் ஒன்று இடம் பெறுகிறது.

உற்சாக நடனம்

உற்சாக நடனம்

‘உன்னை விட மாட்டேன்...' எனத் தொடங்கும் இந்தப் பாடலுக்கு ராபர்ட் மாஸ்டர் நடன அமைப்பில் கணேஷ் வெங்கட்ராமன் மிகவும் சிறப்பாக உற்சாகத்துடன் நடனம் ஆடியுள்ளாராம்.

குத்து டான்ஸ் ஹீரோ

குத்து டான்ஸ் ஹீரோ

போலீஸ், சிங் மாப்பிள்ளை என கெத்து கேரக்டர்களில் நடித்து வந்த கணேஷ் வெங்கட்ராமன், இந்தப் படத்துக்காக முதன் முறையாக குத்துப் பாடல் ஒன்றிற்கு நடனமாடியிருக்கிறார்.

ராபர்ட் நடனம் அமைக்க தொடர்ச்சியாக மூன்று நாள் இரவு இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

நாயகியை விட கவர்ச்சி

நாயகியை விட கவர்ச்சி

இந்தப்பாடலில் கதாநாயகியை விட கூடுதல் கவர்ச்சியாக இருப்பது கணேஷ் வெங்கட்ராமன்தான் என்று படத்தைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.

புது அனுபவம்

புது அனுபவம்

இது தனக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது என்கிறார் கணேஷ் வெங்கட்ராமன். இப்படத்தை தவிர கணேஷ் வெங்கட்ராமன், ஜெயம் ரவி-நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘தனி ஒருவன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

English summary
Actor Ganesh Venkatram recently danced to a high energy kutthu song, his first in his career for his upcoming film Acchaaram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil