இந்த வயதில் இப்படி செய்யலாமா கங்கை அமரன்?.. ச்சீ ரசிகர்கிட்ட ரொம்ப மோசமா நடந்துட்டாரே

சென்னை: இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்டவருமான கங்கை அமரன் மறைந்த பாடலாசிரிய வாலி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசும்போது ரசிகர் ஒருவரிடம் நடந்துகொண்டது பலரிடமும் கடுமையான கண்டனங்களை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

இசைஞானி இளையராஜா போன்றே அவரது சகோதரர் கங்கை அமரனும் திறமை வாய்ந்தவர். இசையமைப்பாளர் பாதையை ராஜா தேர்ந்தெடுக்க; அமரனுக்கோ பாடலாசிரியராக வேண்டும் என்று ஆசை. இளையராஜா இசையமைப்பாளராக ஆன பிறகு அவரது இசையில் பல பாடல்களை எழுந்தியிருக்கிறார் கங்கை. பாடல்கள் எழுதுவது மட்டுமின்றி இசையமைப்பது, கதை எழுதுவது என பல திறமைகளை வைத்திருந்தார் அவர்.

இயக்குநர் கங்கை அமரன்: அந்தவகையில் ராமராஜனை வைத்து கரகாட்டக்காரன் படத்தை இயக்கினார். கனகா ஹீரோயினாக அறிமுகமாகியிருந்த அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டும் அதிக வசூல் ஈட்டிய படங்களில் அப்படத்துக்கு எப்போதுமே தனித்த இடமுண்டு. பிறகு சில படங்களை இயக்கி அதிலும் நல்ல பெயரையே பெற்றார். இதுதவிர்த்து இசையமைப்பாளராகவும் பணியாற்றி கெத்து காண்பித்திருக்கிறார் அவர்.

Gangai Amaran faces Condemnation for humiliating a fan during Vaali tribute event
Photo Credit:

மகன்களும் சினிமாவில்: அவர் போன்றே அவரது இரண்டு மகன்களாக வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோரும் சினிமாவில் சக்சஸ்ஃபுல்லாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அமரனை பொறுத்தவரை ஜாலியாக பேசக்கூடியவர். அந்த ஜாலித்தனமான பேச்சு சில சமயங்களில் அவரை சர்ச்சையிலும் மாட்டிவிட்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இப்போது புதிய சர்ச்சை ஒன்றில் அவர் சிக்கியிருக்கிறார்.

என்ன சர்ச்சை?: அதாவது மறைந்த கவிஞரும், பாடலாசிரியருமான வாலியின் நினைவுதினத்தை முன்னிட்டு சமீபத்தில் ஒரு விழா எடுக்கப்பட்டது. அந்த விழாவில் கங்கை அமரன், மாலன் ஆகியோருக்கு விருதும் வழங்கப்பட்டது. விழாவை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது அவருக்கு பின்னால் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். பேசிக்கொண்டிருக்கும்போதே மாலனை தேடி பின்பக்கம் திரும்பினார் அமரன்.

இப்படி செய்யலாமா?: அப்போது அந்த ரசிகரை பார்த்த அவர், 'வாருங்கள் நீங்கள்' பேசுங்கள் என நல்லபடியாக சொன்னார். அந்த ரசிகரும் சரி உண்மையிலேயே பேச சொல்கிறார் போல என நினைத்து பேச தொடங்கும்போது, கங்கை அமரன் அந்த இடத்திலிருந்து செல்ல முற்பட்டார். அதை பார்த்து பதறிய ரசிகர் உடனே அவரை அழைத்து நீங்களே பேசுங்கள் என சொல்லிவிட்டார்.

என்ன பழக்கம் இது?: பிறகு பேச ஆரம்பித்தபோது 'யாராவது பேசும்போது இப்படித்தான் பின்னாடி நின்று எட்டி எட்டி பார்ப்பதா? இந்தப் பழக்கத்தை எல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும்' என சொன்னார். அந்த இடத்தில் பெரிய தர்ம சங்கடத்தை உணர்ந்த அந்த ரசிகர் பாவத்தோடு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இந்த வீடியோ பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது. மேலும், 'கங்கை அமரனுக்கு இத்தனை வயது ஆகியும் பக்குவம் இல்லையே. அந்த ரசிகர் அமைதியாகத்தான் நின்றுகொண்டிருந்தார். இப்படி அவமானப்படுத்தியிருக்கக்கூடாது' என்று கண்டனமும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X