»   »  நான் ஏன் சூப்பர் ஸ்டாரைப் போய்ப் பார்த்தேன் தெரியுமா? - கங்கை அமரன்

நான் ஏன் சூப்பர் ஸ்டாரைப் போய்ப் பார்த்தேன் தெரியுமா? - கங்கை அமரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்று சந்தித்தது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார் கங்கை அமரன்.

ஆர்கே நகர் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் இன்று திடீரென ரஜினிகாந்தைச் சந்தித்து, அந்த சந்திப்பு குறித்த படங்களையும் வெளியிட்டார்.

Gangai Amaran speaks on his meet with Rajinikanth

இந்த சந்திப்பு குறித்து கங்கை அமரன் கூறுகையில், "எனது நீண்ட கால நண்பர் ரஜினி. நான் தேர்தலில் போட்டியிடுவதையறிந்த ரஜினி, உடனே எனக்கு போனில் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது நேரில் சந்திக்கலாம் என்று கூறினார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிலிருந்து எனக்கு இன்று அழைப்பு வந்தது. பிரசார இடைவெளியில் அவரை இன்று சந்திக்க வீட்டுக்குச் சென்றேன். என்னை அன்போடு வரவேற்ற ரஜினி, கட்டியணைத்துக் கொண்டார். பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். அரசியல் நிலவரங்கள் குறித்தும் விவாதித்தோம்.

ஆன்மிகத்திலிருந்து அரசியல் பிரவேசம் வரை பேசினோம். அப்போது, 'உங்களை மாதிரியான நபர்கள் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்' என்று ரஜினி தெரிவித்தார். ரஜினியின் வாழ்த்துகளை ராகவேந்திராவின் வார்த்தையாக கருதுகிறேன்," என்றார்.

English summary
BJP candidate for RK Nagar, Gangai Amaran says that Superstar Rajinikanth has wished for contesting in RK Nagar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil