»   »  ராயல்டி எல்லாம் காசு, பணம், துட்டு, மணி, மணி: இளையராஜா பற்றி கங்கை அமரன் பேட்டி

ராயல்டி எல்லாம் காசு, பணம், துட்டு, மணி, மணி: இளையராஜா பற்றி கங்கை அமரன் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நானும் போடலாம் போல கேஸு. என்னுடைய வார்த்தைகளை யாரும் பயன்படுத்தக் கூடாதுன்னு என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

காப்புரிமை கேட்டு இசைஞானி இளையராஜா பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து இனி மேடைகளில் இளையராஜா பாடல்களை பாடுவது இல்லை என எஸ்.பி.பி. தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

இளையராஜா

இளையராஜா

இது தேவையில்லாத பிரச்சனை. இளையராஜா இசையை மக்கள் இயற்கையான மழையாக, அருமையான காற்றாக, இதமான தென்றலாக ரசிக்கிறார்கள்.

காற்று

காற்று

இலவசமாக கிடைக்கும் காற்றை சுவாசிப்பது போல இளையராஜா பாடல்களை ரசிக்கிறார்கள். என் காற்றை நீ சுவாசிக்கக் கூடாது என்று சொல்வது மாதிரி என் பாட்டை யாரும் பாடக் கூடாது என்று சொல்வது அது அவருக்கே சரியில்லாத ஒரு விஷயம்.

பாட்டு

பாட்டு

அவருடைய பாட்டை கேட்பதற்காக தவம் இருப்பவர்கள் பல பேர் கேசட்டில் போட்டு ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேடைகளில் பாடக் கூடாது என்று சொன்னால் இதற்கு முன்னுதாரணாக எதுவுமே இல்லை.

எம்.எஸ்.வி.

எம்.எஸ்.வி.

எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட பெரிய இசையமைப்பாளர்களின் பாடல்களை பாடும்போதோ யாருமே என் பாட்டை பாடாதேன்னு காப்புரிமை வைத்துக்கொள்ளவில்லை.

பணம்

பணம்

இந்த காப்புரிமை என்பது பணம் சம்பந்தப்பட்டது தானே தவிர வேறு எதுவுமே இல்லை. பணத்திற்காக இப்படி பண்ணனுமா என்பது என்னுடைய கேள்வி.

உத்தரவு

உத்தரவு

ஒரு பாடகர் அவர் பிரபலமாக காரணமான பாடலை அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மக்கள் எதிர்பார்ப்பது உண்டு. இசையமைப்பாளரின் உத்தரவு இல்லை என்பதற்காக பாடகர் அந்த பாட்டை பாடவில்லை என்றால் இவருக்கு தான் கெட்டப் பெயர் வரும் என்பது இவருக்கு தெரியவில்லை.

பாடல்கள்

பாடல்கள்

இப்ப நான் சொல்லலாம். நான் இளையராஜாவுக்கு ஆயிரம், ஆயிரத்து ஐநூறு பாட்டுக்கள், ஹிட் பாடல்கள் எழுதியிருக்கிறேன். என் வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்றால் எந்த அடையாளத்தில் பாடுவீங்க நீங்க?

கேஸ்

கேஸ்

நானும் போடலாம் போல கேஸு. என்னுடைய வார்த்தைகளை யாரும் பயன்படுத்தக் கூடாதுன்னு. இது என்ன சார் இது. என் வார்த்தைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று ராயல்டி கேட்டால் இது மக்களை ஏமாற்றும் வேலை இது. மக்கள் சந்தோஷமாக இருப்பதை எதற்கு கெடுக்க வேண்டும்.

காப்புரிமை

காப்புரிமை

காப்புரமை பெற்று லைசென்ஸை வாங்கி அந்த பணத்தை வைத்து அவர் என்ன பண்ண போகிறார்னு தெரியவில்லை. மக்களுக்காக ஏதாவது செய்யப் போகிறாரா, அவர் பெத்த மக்களுக்காக செய்யப் போகிறாரா, உடன் பிறந்தவங்களுக்கு செய்யப் போகிறாரா என தெரியவில்லை.

English summary
Music composer Gangai Amaren has slammed brother Isaignani Ilaiyaraja over royalty issue. He is not happy with the way his brother is behaving.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil