twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நவராத்திரி கொண்டாட்டங்கள்: தாண்டியா பாடல் தேர்வில் கங்கனம், சென்னை எக்ஸ்பிரஸ்...

    |

    மும்பை: நவராத்திரி கொண்டாட்டங்களில் ஆடப்படும் தாண்டியா ஆட்டத்திற்கான பாடல் தேர்வில் இந்தாண்டு கொரியாவின் பிரபலமான சையின் கங்கனம் பாடலும், ஷாரூக்கின் சென்னை எக்ஸ்பிரஸ் பாடல்களும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

    வரும் 13,14 தேதிகளில் ஆய்தபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில், நவராத்திரி கொண்டாட்ட வேலைகளில் மக்கள் ஆர்வமாக பங்கெடுத்து வருகின்றனர். வீடுகளில் கொலு வைப்பதாகட்டும், தாண்டியா நடனங்கள் ஆடுவதாகட்டும் மக்கள் பரபரப்பான முன்னேற்பாடுகளில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்தாண்டு தாண்டியா ஆட்டத்திற்கான பாடல் தேர்வில் கங்கனம் பாடலும், சென்னை எக்ஸ்பிரஸ் பாடலும் மக்களின் முக்கியத் தேர்வாக உள்ளதாம்.

    இது கங்கனம் ஸ்டைல்....

    இது கங்கனம் ஸ்டைல்....

    இதற்குக் காரணம், கங்கனம் பாடல் கேட்பவர்களுக்கு உற்சாகத்தையும், சக்தியையும் அளிக்கும் விதத்தில் இருப்பதே எனக் கூறுகிறார் தாண்டியாவிற்கென சிறப்பு வகுப்புகளை நடத்தி வரும் நடன ஆசிரியர் கேட்கி கலெ.

    கர்பா பாடல்கள்....

    கர்பா பாடல்கள்....

    மேலும், பொதுவாக பாரம்பரிய கர்பா பாடல்களுடன் ஆரம்பிக்கப்படும் இந்த நடனங்கள் பின்னர் ஹிந்தி திரைப்பாடல்களுக்கு மாறும். இந்தமுறை இதில் மக்களுக்கு உற்சாகத்தையும், ஈர்ப்பையும் அளிக்கும் இந்த மேற்கத்திய பாணியும் சேர்க்கப்பட்டுள்ளது என கலே தெரிவித்துள்ளார்.

    வயது பேதமின்றி...

    வயது பேதமின்றி...

    இளைய தலைமுறை என்றில்லாமல் நடுத்தர வயதினரையும் இந்தப் பாடல் கவர்ந்துள்ளதையே இது காட்டுகிறது.

    சென்னை எக்ஸ்பிரஸ்....

    சென்னை எக்ஸ்பிரஸ்....

    அதேபோல், இந்த ஆண்டு கங்கனம் பாடலைத் தவிர, சென்னை எக்ஸ்பிரெஸ், கை போச்சே படத்திலிருந்து ஷுபாரம்ப், ஏ ஜவானி ஹேய் திவானி படத்தின் பலம் பிக்காரி மற்றும் டில்லிவாலி கேர்ள்பிரெண்ட் ஆகிய பாடல்களுக்கான நடனப் பயிற்சிகளில் மக்கள் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனராம்.

    சில பல மாற்றங்களோடு....

    சில பல மாற்றங்களோடு....

    மேற்குறிப்பிட்ட இந்தப் பாடல்கள் நவராத்திரி கோலாகலங்களுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு கற்பிக்கப்பட்டு வருவதாக கர்பா மற்றும் தாண்டியா நடனப் பயிற்சிகளை அளித்து வரும் நிராலி சோமேஷ்வர் என்பவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    With Navratri just round the corner, the city is all geared up for nine days of dance and music. This year, apart from Bollywood tunes that are a regular at dandiya nights, the track that's making waves is Korean singer Psy's Gangnam Style. Everyone wants to Oppa Gangnam Style because of its high on fun and energy quotient.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X